Best natural fertilizers for home garden 2023

Best natural fertilizers for home garden 2023

வீட்டு தோட்டத்திற்கான சிறந்த இயற்கை உரங்கள்..!

உங்கள் வீட்டில் தோட்டம் வளர்ப்பது வீட்டிற்கு அழகை சேர்ப்பது மட்டுமில்லாமல், அதை பார்க்கும்போது மனம் அமைதிபெறும் கண்கள், புத்துணர்ச்சி அடையும்.

வீட்டில் தோட்டம் வளர்ப்பதால், பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது, குறிப்பாக சுத்தமான காற்று கிடைக்கும், மூலிகைச் செடி வளர்ப்பது சளி காய்ச்சல் போன்ற நேரங்களில் மூலிகைகளை பயன்படுத்தலாம்.

வீட்டின் மொட்டைமாடி அல்லது வீட்டின் அருகில் சிறிது இடம் இருந்தால் அதை நீங்கள் தோட்டமாக மாற்றி விடலாம்.

அதில் பூஞ்செடிகள், மூலிகை செடிகள், காய்கறி செடிகள், போன்றவற்றை வளர்க்கலாம், முக்கியமாக காய்கறி செடிகள்.

கத்திரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், கீரை வகைகள், முருங்கை கீரை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள், கரும்பு, வெற்றிலை, சப்போட்டா, சீதாப்பழம், போன்றவற்றை வளர்க்கலாம்.

சில நேரங்களில் தக்காளி போன்ற அத்தியாவசியமான காய்கறிகளின் விலை என்பது உச்சத்தைத் தொட்டு விடுகிறது, அது போன்ற நேரங்களில் வீட்டில் தோட்டம் இருந்தால் உங்களுடைய பணம் மிச்சமாகும்.

குறிப்பாக வீட்டில் தோட்டம் இருந்தால் கோழி வளர்க்கலாம், கோழி கழிவுகள் மூலமும் தோட்டம் செழிப்பாக வளரும்.

அழுகிய காய்கறிகளையும் கோழிகள் உணவாக எடுத்துக் கொள்ளும்.

வீட்டில் உள்ள தோட்டத்திற்கு சிறந்த இயற்கை உரங்களை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Best natural fertilizers for home garden 2023

கடல்பாசி

இயற்கை விவசாயம் அல்லது தோட்டத்திற்கு கடல்பாசி எப்பொழுதும் சிறந்ததாக இருக்கிறது.

Best natural fertilizers for home garden 2023 இதில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், சர்க்கரை, வைட்டமின் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல முக்கிய தாதுக்கள் இருப்பதால் தாவர வளர்ச்சி அதிக மகசூல் பெறவும் இது உதவுகிறது.

கடல்பாசி கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும், கடல் பாசி இணையதளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது, கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Best natural fertilizers for home garden 2023

முட்டை ஓடு

முட்டை ஓடுகளில் உள்ள மிதமிஞ்சிய கால்சியம், தக்காளி, மிளகாய், போன்ற செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது, முட்டை மற்றும் முட்டை ஓடுகளை எப்படி எல்லாம் உரமாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

Best natural fertilizers for home garden 2023 முட்டை ஓடுகளை நன்றாக பவுடர் போல செய்து வேர்ப்பகுதியில் நீரில் கலந்து தெளிக்கலாம்,முட்டை ஓடுகளில் இருக்கும் அதிகப்படியான புரதம், கால்சியம், ஊட்டச்சத்து காரணமாக செடி மிக தடிமனாக வளர ஆரம்பிக்கும்.

ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 150 முதல் 200 முட்டைகள் வரை உணவாக பயன்படுத்துகிறார், அத்தனை முட்டை ஓடுகளும் வீணாகப் போகாமல் இயற்கை உரமாக பயன்படுத்துவது மிக நல்ல செயல்தான்.

Best natural fertilizers for home garden 2023

அழுகிய காய்கறிகள்

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் இறைச்சியின் கழிவுகள் போன்றவற்றை சேர்க்காமல்.

தக்காளி,வெங்காயம், புதினா மற்றும் சில காய்கறிகள் அழுகியிருந்தால் அத்தகைய காய்கறிகளை உரமாக மாற்றுவதற்கு ஒரு பாத்திரம் அல்லது வாளியில் வைக்கலாம்.

Best natural fertilizers for home garden 2023 அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை கீழே ஊற்றாமல் ஒரு வாளித் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளித்து வாருங்கள், இவ்வாறு செய்வதினால் செடிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

Best natural fertilizers for home garden 2023

சாம்பல்

செடிகளில் இருக்கும் இலைகள் மற்றும் காய்கறிகளை பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு சாம்பல் மிக சிறந்த உரமாக பயன்படுகிறது.

சாம்பலில் பொட்டாஸ் என்னும் சாம்பல் ஊட்டச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது.

நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சி தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற சூழ்நிலைகளை தங்குவதற்கு, சாம்பல்சத்து போதுமான திறனை செடிகளுக்கு ஊட்டமளிக்கிறது.

Best natural fertilizers for home garden 2023

சாணம்

சாணம் பொதுவாக கிருமி நாசினியாக பல காலமாக நம் கலாச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது, சாணம் கலந்த தண்ணீரை செடிகளின் மேல் தெளிப்பதால், பூச்சி தாக்குதல் காய்கறிகளை, எறும்புகள் தாக்காமலிருக்க பயன்படுத்தப்படுகிறது.

மாடு, ஆடு, கோழி, போன்றவைகளில் இருந்து சாணம் எடுத்து அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

New Best 10 Latest Mehndi Designs 2023

இந்த மாட்டுச் சாணத்தில் நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், போன்றவை அதிகமாக இருக்கிறது.

இவை செடிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது, குறிப்பாக செடிகளை பூச்சி, புழு, எறும்புகளிலிருந்து பாதுகாக்கிறது.

Best natural fertilizers for home garden 2023

காப்பித்தூள்

காபி தூளில் இருக்கும் நைட்ரஜன், மக்னீசியம், மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் செடிகளின் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்க செய்கிறது.

What are the benefits of doing yoga everyday

குறிப்பாக பூச்செடிகளுக்கு காபித்தூள் பயன்படுத்தலாம் ரோஜா, மல்லி, கனகாம்பரம், போன்ற செடிகளுக்கு.

Best natural fertilizers for home garden 2023

மீன் தொட்டி நீர்

மீன் தொட்டியில் உள்ள தண்ணீரில் நைட்ரஜன் மற்றும் செடிகளுக்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கும், எனவே இந்த தண்ணீரை நீங்கள் செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு உறுதியுடன், வேர்கள் நன்கு வளர ஆரம்பிக்கும்.

Best natural fertilizers for home garden 2023

 

களைகள்

உங்கள் தோட்டத்தை சுற்றி வளர்ந்து இருக்கும் தேவையில்லாத செடிகளை வேரோடு பிடுங்கி அதனை உரமாக பயன்படுத்தலாம்.

இதனால் இந்த செடிகளில் மறைந்திருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களுடைய காய்கறி ,பூச்செடி, மற்றும் மூலிகை செடிகளுக்கு முழுவதும் கிடைக்கும்.

Leave a Comment