Best news published by Edappadi 2023
தெய்வமே என வேண்டி கேட்டேன் சில நிமிடங்களில் அற்புதம் நடந்தது உணர்ச்சிப் பெருக்கியில் ஆனந்த கண்ணீரில் எடப்பாடி பழனிச்சாமி..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, எம்ஜிஆருக்கும் மதுரையில் ஆர் பி உதயகுமார் அவர்கள் கோயில் கட்டியுள்ளார்.
இன்று மதுரையில் ஆர் பி உதயகுமார் மகன் திருமணத்திற்கு சென்ற எடப்பாடி கே பழனிசாமி, செல்வி ஜெ ஜெயலலிதாவிற்காக கட்டிய கோயிலில் வணங்கியபோது தீர்ப்பு கிடைத்தது என்பதை வெளிப்படையாக தெரிவித்து மகிழ்ச்சியை அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு கட்டிய கோவிலில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டிய சில நிமிடங்களில் அற்புதம் நிகழ்ந்ததாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிப் பெருக்குடன் பேசியுள்ளார்.
எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் தெய்வ சக்தி மிக்க தலைவர்கள் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதீத உணர்ச்சி பெருக்குடன் இருந்தது, தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிமுக சார்பில் மதுரையில் 51 திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அப்போது செல்வி ஜெ ஜெயலலிதாவிற்காக கட்டிய கோவிலில் வணங்கிவிட்டு பக்கத்து அறைக்கு சென்ற போது தீர்ப்பு சாதகமாக வந்தது என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம்
இதன் மூலம் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக எடப்பாடிபழனிசாமி உருவெடுத்து உள்ளதாக அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.
Best news published by Edappadi 2023 இந்த நிலையில் திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பின் திருமணவிழாவில் உற்சாகம் அடுத்த கட்டத்திற்கு சென்றது.
Best news published by Edappadi 2023 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருமண விழாவில் எடப்பாடிபழனிசாமி பேசுகையில் பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு என்று அறிந்ததில் இருந்து தூக்கம் இல்லை.
இன்று மதுரைக்கு புறப்பட்ட போது கூட தீர்ப்பு எப்படி இருக்கும் என்று பயத்தோடு தான் நான் பயணித்தேன், என் உதட்டில் சிரிப்பும் இருந்தாலும் என் உள்ளத்தில் சிரிப்பில்லை.
ஏனென்றால் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இங்கு வந்து கொண்டிருந்தபோது ஆர் பி உதயகுமார் என்னிடம் வந்து திருமண மேடையில் ஏறுவதற்கு முன் ஜெயலலிதா, எம்ஜிஆர் கோவிலுக்கு சென்று மாலை அணிவித்து விட்டு வரலாம் என கூறினார்.
என்னுடன் வந்த செல்லூர் ராஜ், ராஜன் செல்லப்பா மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோரும் அதே கூறினார்கள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஜெயலலிதா கோவிலுக்கு சென்றேன் அங்கு நான் இன்று அற்புதமான நாள் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது.
Best news published by Edappadi 2023 உங்கள் ஆசியுடன் நடக்கும் திருமண நாளில் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினான்.
இந்தக் கோவில் தெய்வ பக்தியோடு இருக்கிறது, கோவில் இருபெரும் தலைவர்களும் எங்களுக்கு அருள் கொடுத்தார்கள் அவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களில் அற்புதமான செய்தி வந்தது.
சக்தி மிக்க தலைவர்கள் இருவரும் தெய்வங்களாக கொடுத்த வரப்பிரசாதம் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் நாங்கள் இருவரும் உங்களுடன் இருக்கிறோம் என்று ஆசியுடன் தீர்ப்பு வந்துள்ளது.
வேண்டி வீட்டு பக்கத்தில் இருக்கும் அறைக்கு சென்றபோது செய்தியைக் கூறி விட்டார்கள்.
அவர்கள் தெய்வ சக்தி மிக்க தலைவர்கள் என்று தெரிவித்தார், இந்த உரையாற்றியபோது பழனிசாமி அதீத உணர்ச்சி பெருக்குடன் இருந்தார்.
அருகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் கண்கலங்கி முகத்தில் சிரிப்புடன் எடப்பாடிபழனிசாமி பேச்சைக் கேட்டனர்.