Best Plan Indian Government 2020 in Tamil

தேசிய ஓய்வூதிய திட்டம் 2020 தமிழில்(Best Plan Indian Government 2020 in Tamil)

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என்ற பழமொழி இந்த 2020 வருடம் அனைவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்டது. அரசாங்கம் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது அதில் ஒன்றுதான்  தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்

இந்தியாவில் சுகாதாரத் துறை செயல்பாடுகள் நன்றாக அமைந்துள்ளதால் மக்களின் ஆயுட்காலம் 75 ஆண்டுகளாக நீண்டுள்ளது மேலும் 58 அல்லது 60 வயதில் ஓய்வு பெறும் ஒரு நபர் 60 வயதிற்கு மேல் சுகமான வாழ்க்கையை கழிக்க அரசாங்கம் கொண்டுவந்திருக்கும்  இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நிச்சயம் உதவும்.

தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்.

Best Plan Indian Government 2020 in Tamil

மத்திய மற்றும் மாநில அரசுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் 2004ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் 2009ம் ஆண்டு  இந்த திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அரசுத் துறை, தனியார் துறை, பொதுத்துறை, இல்லத்தரசிகள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என்ற அறிவிப்பினை இந்திய அரசு வெளியிட்டது இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு திட்டமாகும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்வது எப்படி.

Best Plan Indian Government 2020 in Tamil

18 வயது முதல் 60 வயது உள்ள நபர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் மேலும் அரசாங்கம் அறிவித்திருக்கும் கேஒய்சி விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது நல்லது.

இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு தேவையான ஆவணங்கள்.

வங்கி மற்றும் மற்ற திட்டங்களில் இணைந்து கொள்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தும்  இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது ஆதார் கார்டு, பான் கார்டு, பிறப்புச் சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்கள் மட்டும் தேவைப்படுகிறது.

மேலும் இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அரசாங்கம் வெளியிட்டிருக்கும் என்ற இணையதளத்தை பார்க்கவும். india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all.

இந்த திட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தை இந்தியாவில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் இயக்கி கொள்ள முடியும் மேலும் தனியார் துறையில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கை அரசுத் துறை வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

மாநில துறையிலிருந்து மத்திய துறைக்கு மாறினாலும் எந்த ஒரு பிரச்சனையும் இதில் இல்லை.

இந்த திட்டத்திற்கு சேவை செய்யும் நிறுவனங்கள்.

இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்.

Life Insurance Corporation of Indian

ICICI Prudential Life Insurance

Star Union Dai-inch Life Insurance

Reliance Life Insurance

HDFC Standard Life Insurance

SBI Life Insurance

BAJAJ Allianz Life Insurance

PLAN 1- குறைந்த பட்சம் எவ்வளவு செலுத்த முடியும்.

Best Plan Indian Government 2020 in Tamil

PLAN 1 திட்டத்தில் இணைந்தால் ஓய்வு பெறும் வரை இந்த திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியாது குறைந்தபட்சம் மாதம் 6000 ரூபாய் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் இந்தக் கணக்கை தொடர்ந்து நடத்த முடியாது.

Sukanya Samriddhi Yojana Benefits 2020

PLAN 2- குறைந்த பட்சம் எவ்வளவு செலுத்த முடியும்.

PLAN 1 இத்திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் மட்டும் PLAN 2 திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். மேலும் PLAN 2 திட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கல்விச் செலவு, மருத்துவச் செலவு மற்றும் புதிய வீடு கட்டுவதற்கு போன்றவைகளுக்கு சரியான சான்றிதழ்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.twitter

Leave a Comment