Best Plan Indian Government in 2020

மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் சிறந்த திட்டங்கள்(Best Plan Indian Government in 2020)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டுமே உலகில் உள்ள சில நாடுகள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறிய அளவில் எரிபொருள் விலையை உயர்த்தும் ஆனால் இந்தியாவில் அதற்கு எதிர்மாறாக எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும் இந்த 2020 ஆம் ஆண்டு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆண்டாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் எப்பொழுதும் சரிவை சந்திக்காத கச்சா எண்ணெய் விலை 0 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலை மார்ச் மாதம் முதல் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

நிதி நெருக்கடி.

Best Plan Indian Government in 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய, மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை சமாளிப்பதற்கு டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மற்றும் பெட்ரோல் மீது கலால் வரியை 3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது கலால் வரியை எப்பொழுது உயர்த்துவது  என்பது பற்றி இறுதி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

Best Plan Indian Government in 2020

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 45 ரூபாயாக கடந்த மாதம் இருந்தது. ஆனால் இந்த மாதம் 40 ரூபாயாக விற்கப்படுகிறது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்து கொண்டே வருகிறது ஆனாலும் இந்திய மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லாமல் இருக்கிறது இதற்கு மத்திய மாநில அரசுகள் கச்சா எண்ணெய் விலை மீது 70 சதவீத அளவிற்கு பல்வேறு வரிகளை விதித்துள்ளது.

விரைவில் இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 75 -80 சதவீதம் வரை உயர்த்த கூடும் என்ற அறிவிப்பினை ET aut.com என்று இணையதளம் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டம்,

Best Plan Indian Government in 2020

இந்த ஆண்டு கலால் வரி மூலம் மட்டும் 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. மேலும் கலால் வரி மூலம் மட்டும் ரூபாய் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் திரட்டப்படும் என்ற நிலையில் மத்திய அரசு உள்ளது.

Best scheme Indian government in 2020.!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இந்தியாவில் எரிபொருள் மீதான விலை சிறிய அளவில் குறையும். ஆனால் மத்திய அரசு உடனே பல்வேறு வரிகளை உயர்த்தி எரிபொருள் மீதான விலையை எப்பொழுதும் குறையாமல் உயர்த்தி கொண்டே இருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் வருவாயை பெருக்கிக் கொள்வதற்கு இது போன்ற யுத்திகளை பயன்படுத்திக் கொள்வதால் நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

Leave a Comment