சிறந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டம் 2020.!!!(Best post office saving Scheme 2020)
ஆண் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்பு இந்தியாவில் புரட்சிகரமாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்களுக்கு உதவும் வகையில் பொன்மகள் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது பொன்மகள் சேமிப்பு திட்டம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது
பொன்மகள் சேமிப்பு திட்டம் மூலம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றுள்ளது.
பொன்மகன் சேமிப்பு திட்டம்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.10 வயதிற்கு மேல் உள்ள ஆண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டம் தொடங்கலாம் அல்லது பத்து வயதிற்கு கீழ் உள்ள ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர்களுடன் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் மற்ற சேமிப்பு திட்டங்களை ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை இந்த திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறது. இப்போது இருக்கும் வட்டி விகிதம் 7.8 சதவீதமாக உள்ளது
எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கைத் தொடங்கி குறைந்தபட்சம் 100 ரூபாய் வைப்பு வைக்க வேண்டும் ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் உள்ள முக்கிய சலுகை.
இந்த திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கழித்து 50% பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் திரும்பப் பெற்றுக் கொண்ட பணத்தை திரும்ப செலுத்த வேண்டியது இல்லை.
எத்தனை ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். மற்றும் அவசர காலங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியும் மேலும் இந்த திட்டத்தில் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் கழித்துதான் கடன் பெற முடியும்.
அரசு மானியத்துடன் எளிதாக கோழி பண்ணை அமைக்கலாம் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.!!
வரிவிலக்கு உண்டு.
80 C பிரிவின் கீழ் இந்த திட்டத்திற்கு வரி விலக்கு உண்டு. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் மற்றும் வட்டி விகிதத்திற்கு வரிவிலக்கு உண்டு.
உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த திட்டம் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்படுவதால் உங்கள் பணத்திற்கு எந்த ஒரு தீங்கு விளையும் ஏற்படாது. மத்திய அரசு நேரடியாகவே இந்த திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் உங்களுடைய பணம் எப்பொழுதும் பாதுகாப்பாகவே இருக்கும்.