இணையதளம் மூலம் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு பூஜ்ஜியம் பேலன்ஸ் எப்படி தொடங்குவது.( Best Post office zero balance account 2021)
இந்தியாவில் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை வேண்டும் என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த குறையை தீர்க்கும் நோக்கத்துடன் தபால் அலுவலகங்களில் பூஜ்ஜியம் பேலன்ஸ் சேமிப்பு கணக்கை பொதுமக்கள் திறப்பதற்கு ஏதுவாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டத்தின் விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.
தற்போது தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவை ஆனால் இந்த பூஜ்ஜியம் பேலஸில் தொடங்கப்படும் சேமிப்பு கணக்கு இருப்பு தொகை தேவையில்லை.
மேலும் இந்தக் கணக்குகளுக்கு மத்திய அரசு உத்தரவாதம் வழங்குகிறது அதாவது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்திற்கு ஏதாவது ஒன்று நடந்தால் பணத்தை அவர்களுக்கு திருப்பி தரப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறப்பான திட்டமாக மக்களுக்கு அமைகிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவர் பணம் எடுக்கும் வரம்பு 5,000 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது இந்த கோரிக்கை நீண்ட காலமாக மக்களிடத்தில் இருந்து இதனை அரசாங்கம் பரிசீலித்து இப்பொழுது நடைமுறைப்படுத்தி உள்ளது இதனால் வங்கிகளுக்கு இணையாக போட்டியாக இந்த திட்டம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைவதற்கு என்ன தகுதி வேண்டும்.
கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி 2021 மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது அதில் தபால் அலுவலகங்களில் ஜீரோ பேலன்ஸ் கணக்கினை தொடங்குவதற்கு ஏதேனும் ஒரு அரசாங்க திட்டங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வயதுவந்த நபர்கள் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் அரசாங்க நல திட்டங்களுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களும் இந்த கணக்கை தொடங்கலாம்.
இந்த சேமிப்பு கணக்கை முதன்மை சேமிப்பு கணக்காக அரசாங்க நலத்திட்டங்களில் பதிவு செய்த நபர்கள் தொடங்கலாம் மேலும் ஒருவர் ஒரு கணக்கை மட்டுமே தொடங்க முடியும் இந்த கணக்கை அரசாங்க நலத்திட்டங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுதியம், எல்பிஜி மானியம், மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் குறைந்த இருப்பு தொகை வைக்க விருப்பம் இல்லை என்றால் இந்த கணக்கை நீங்கள் தொடங்கலாம்.
நேரடியாக எப்படி தொடங்குவது.
நீங்கள் இந்த கணக்கைத் தொடங்க விருப்பப்பட்டால் உங்கள் அருகில் இருக்கும் தபால் அலுவலகத்திற்கு சென்று அங்கு வழங்கப்படும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
மேலும் தபால் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது உங்களுடைய கேஒய்சி ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் 2 போட்டோக்கள் எடுத்துச் செல்லுங்கள்.
இதற்குப் பின்பு உங்களுடைய விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுத்த பின்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுடைய கணக்கு செயல்பட தொடங்கிவிடும்.
இணையதளம் மூலம் கணக்கு எப்படி தொடங்குவது.
தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளை இணையதளம் மூலமும் தொடங்கலாம் இதற்கு நீங்கள் தபால் அலுவலகம் வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் சேவிங் அக்கவுண்ட் (SAVING ACCOUNT) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து அதன்பிறகு அப்ளை நவ்(APPLY NOW) என்பதை கிளிக் செய்யவும் பின்பு உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் கேஒய்சி உடன் கொடுக்கவும் பின்பு SUMIT கொடுத்தவுடன் உங்களுடைய அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
Top 10 most delicious fruits in the world
ஏடிஎம் & காசோலை வசதி உண்டு.
உங்களுடைய அனைத்து கேஒய்சி ஆவணங்களை சரி பார்த்த பின்பு தபால் அலுவலகத்தில் உங்களுக்கு காசோலை புத்தகம் ஏடிஎம் அட்டை மற்றும் இணையதள வங்கி சேவை போன்றவற்றை அளிக்கும் தற்போது வரை இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 4% வட்டி அளிக்கப்படுகிறது.