இளைஞர்களிடம் எப்பொழுதும் முதல் தேர்வாக இருக்கும் பெஸ்ட் பைக் இதுதான் .(best sales bike in India 2020 in Tamil)
150-200 சிசி செக்மெண்ட் பைக்குகள் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவிற்கு பின்னர் இந்தியாவில் தற்போது இருசக்கர வாகனங்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பிஎஸ் 6 , கலர் எடிட்டிங், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் போன்ற காரணங்களால் இரண்டு சக்கர வாகனங்களின் விலை உயர்ந்தது.
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் இப்பொழுது முதலிடத்தில் உள்ளது
150-200 சிசி செக்மெண்ட் பைக்குகளில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் இப்பொழுது முதலிடத்தில் உள்ளது பஜாஜ் நிறுவனத்திற்கு அதிக விற்பனையை தந்து கொண்டிருக்கும் பல்சர் ரேஞ்ச் பைக்குகள் இந்தியா மற்றும் பல சர்வதேச சந்தைகளிலும் பிரபலமாக வலம் வருகிறது.
பல்சர் 150, என் எஸ் 160,180,200 மற்றும் ஆர்எஸ் 200 போன்ற மாடல்கள் 150-200 சிசி செக்மெண்ட் உள்ளடங்கியுள்ளது . இதன் விலை 91 ஆயிரம் ரூபாய் முதல் 1.51 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 38,151 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. இது 14.60 சதவீதம் வீழ்ச்சியாகும். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் எண்ணிக்கை 44,672 இருந்தது.
இரண்டாவது இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி பிடித்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ் வாய்ந்த மாடலாக உள்ளது. இதனுடைய பர்பாமென்ஸ் எப்பொழுதும் நன்றாக இருக்கிறது . தற்போதைய நிலை அப்பாச்சி ரேஞ்சில் ஐந்து பைக்குகளை வழங்குகிறது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 160 4 வி , ஆர்டிஆர் 180,ஆர்டிஆர் 200 4 வி மற்றும் ஆர்டிஆர் 200 இ 100 என மொத்தம் ஐந்து பைக்குகளை வழங்குகிறது. இதன் விலை 87 ஆயிரம் ரூபாய் முதல் 1.34 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 33,540 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் எண்ணிக்கை 26,402 இருந்தது. இது சதவீத 27.04 வளர்ச்சியாகும்.
keep face always beautiful in Tamil
மூன்றாவது இடத்தை ஹோண்டா யூனிகான் 160 மாடல் பிடித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் பிஎஸ் 6 , யூனிகான் 160 மாடலை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் அறிமுகம் செய்தது.93,593 ரூபாய் என்ற ஆரம்ப விலையை ஹோண்டா நிறுவனம் உறுதி செய்தது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 17,868 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.twitter