Best scheme Indian government in 2020.!!!!!

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த திட்டம் கண்டிப்பாக தேவைப்படும் (Best scheme Indian government in 2020.!!!!!)

பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு பல்வேறு திட்டங்களை இந்தியாவில் அறிவித்தார். வீடு, மானிய விலையில் எரிவாயு சிலிண்டர், மருத்துவ காப்பீடு, தொழில் தொடங்குபவர்களுக்கு மானிய, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வுதியம், அனைத்து வீடுகளுக்கும் கழிவறை, போன்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவில் செயல்முறை படுத்துகிறார்.

அதில் ஒரு திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா இந்த திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொண்டுவரப்பட்டது.

அடல் பென்ஷன் யோஜனா.

Best scheme Indian government in 2020.!!!!!

இந்த திட்டம் அறிவித்த சில ஆண்டுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதற்கு சிறந்த உதாரணம் கடந்த தினங்களில் வெளியான புள்ளி விவரங்கள்.

இந்த திட்டத்தில் இதுவரை 2.4  கோடி மக்கள் இணைந்துள்ளனர் இந்தியாவில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

2016 ஆண்டுகளுக்கு முன்பு அரசு துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் என்ற திட்டம் இருந்தது ஆனால் திரு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2016 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை இந்தியாவில் அறிமுகப் படுத்தினார் இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த திட்டம்.

இந்த திட்டத்தில் எப்படி இணைவது.

Best scheme Indian government in 2020.!!!!!

இந்த திட்டத்தில் மக்கள் எளிமையாக இணைந்து கொள்ளலாம் என்ற வகையில் அமைந்துள்ளது இந்த திட்டம் 18 வயது முதல் 40 வயது உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம் அதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வைத்துள்ள வங்கி கணக்கு அல்லது தபால் துறை மூலம் இதில் இணைந்து கொள்ளலாம்.

நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து முகவரி சான்று அடையாள சான்று போன்ற ஆவணங்களை கொடுத்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் அதற்குப் பின்பு உங்களுக்கு ப்ரான் நம்பர் கொடுக்கப்படும்.

எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்.

உங்களுக்கு 60 வயதிற்கு மேல் எவ்வளவு தொகை ஓய்வூதியமாக வரவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள் அதனைப் பொறுத்து மாதாமாதம் நீங்கள் ஒரு தொகையை செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து ப்ரான் கணக்கில் வரவு  வைக்கப்படுவது உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பப்படும்.

நீங்கள் செலுத்தும் தொகையை மாற்றம் செய்துகொள்ளலாம்.

முதலாம் ஆண்டு நீங்கள் 2000 ரூபாய் செலுத்தி உள்ளீர்கள் இதனை கூட்டவோ குறைக்கவோ முடியும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்துகொள்ளலாம்.

மருத்துவ செலவிற்கு பயன்படுத்த முடியுமா.

இந்த திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர் 60 வயதிற்கு முன்பு அவசரகால மருத்துவ செலவிற்கு அவர் செலுத்திய தொகையை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும்.

60 வயதிற்கு பின்பு என்ன நடக்கும்.

Best scheme Indian government in 2020.!!!!!

இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள சந்தாதாரர் 60 வயதிற்கு மேல் அவர் கேட்ட தொகை மாதாமாதம் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்படும் மற்றும் அவர் இறந்த பின்பு அவருடைய நாமினிக்கு இந்த தொகை செலுத்தப்படும்.

svamitva scheme launched 2020 in India

நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் உங்களது பென்சன் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நாமினி இறந்து விட்டாள் அதற்கு பதிலாக வேறு ஒரு நபரை உங்கள் பென்சன் திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் உங்கள் வங்கிக்கு சென்று சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கிளையில் இருந்து வேறு ஒரு வங்கிக்கு உங்களது சேமிப்பு கணக்கை மாற்றிக்கொள்ளலாம். TWITTER

Leave a Comment