சிறந்த திட்டம் கிசான் விகாஸ் பத்ரா 2020 தமிழில்.(Best Scheme kisan vikas patra 2020 in tamil)
நம்மில் அனைவருக்கும் நம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவில் பணம் அல்லது பொருள்களை சேமிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அதை எப்படி சேமிக்க வேண்டும் எப்பொழுது சேமிக்க வேண்டும் போன்ற முக்கியமான தகவல்கள் நமக்கு கிடைப்பதில்லை இதைப்பற்றி இக்கட்டுரையில் முழுமையாக காணலாம்.
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமாக வேண்டும் என்ற சூழ்நிலையில் மனிதகுலம் இருக்கிறது சேமிக்கப்படும் பணத்திற்கு பாதுகாப்பு அதற்கு வருவாய் போன்ற அம்சங்களுடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு பல்வேறு சேமிப்பு திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார் அதில் முக்கியமான ஒரு சேமிப்பு திட்டம் தான் இந்த கிஷான் விகாஸ் பத்திரம்.
அறிமுகம் செய்யப்பட்டது.
1988 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு மட்டும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது பின்னர் அனைவரும் இணைந்து கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியானது மேலும் 2011ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அப்போது இருந்த அரசு இந்த திட்டத்தை தடை செய்தது.
2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இணைத்து கிஷான் விகாஸ் பத்திர திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் இதற்கு உங்கள் பான் கார்டு கொடுக்க வேண்டும். மேலும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் உங்களுடைய வருமானத்திற்கு சான்றிதழ்கள் கொடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் 10 ஆண்டு 4 மாதங்கள் முதலீடு செய்தால் உங்கள் தொகை இரட்டிப்பாகிறது.
யார் யாரெல்லாம் இதில் இணைய முடியும்.
ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடன் இணைந்து இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும் மற்றும் 18 வயது பூர்த்தியான எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணையலாம் இந்தத் திட்டத்தில் இணைய வங்கி கணக்கு தேவை இல்லை தபால் துறையில் சேமிப்பு கணக்கு இருந்தால் போதும் இதில் அறக்கட்டளைகள் கூட சேமிப்பு கணக்கு தொடங்க முடியும்.
அஞ்சல் அலுவலகத்தில் இணைய முடியும்.
இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட சான்றிதழ்களை சமர்பித்து சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்ட உடன் அதற்கான பாஸ் புக் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் விண்ணப்பதாரர்கள் எதிர்பாராத விதத்தில் மரணமடைந்தால் அவர் பரிந்துரைத்த நாமினி பெயரில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அவசரத்துக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இணைந்து 30 மாதங்கள் கழித்து விண்ணப்பதாரர்களுக்கு விருப்பம் எனில் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அதற்கு வட்டி விகிதம் கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தேவைப்பட்டால் இந்த கணக்கை மற்றொரு நபருக்கு மாற்றிக் கொள்ளலாம் அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் தபால்துறை மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஏழு உணவுகளை பயன்படுத்துங்கள்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் பயன்கள் என்ன.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் இந்திய சந்தைகள் ஏற்றம் இறக்கம் கண்டாலும் அதற்கேற்றார்போல் எப்பொழுதும் கணிசமான வருவாய் இருந்து கொண்டே இருக்கும்.
கடன் மற்றும் வட்டி விகிதம்.
கிசான் விகாஸ் பத்ரா மூலம் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற முடியும் மேலும் இந்த கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.
மத்திய நிதி அமைச்சகத்தால் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில் வட்டி விகிதம் 6.6 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வரி விலக்கு என்பது கிடையாது ஆனால் திட்டம் முதிர்ச்சி அடைந்து முழுத் தொகையும் திரும்ப பெரும்பொழுது டிடிஎஸ் விளக்க அளிக்கப்படுகிறது.twitter