Best small business ideas in tamil 2022
பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய அருமையான சுயதொழில் வாய்ப்புகள்..!
இப்பொழுது உங்கள் சூழ்நிலையில் அனைவரும் ஏதாவது ஒரு சுய தொழில் துவங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அந்த வகையில்.
இந்த பதிவில் அனைவரும் வீட்டிலிருந்து செய்யக்கூடிய ஒரு எளிமையான அருமையான சுயதொழில் வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு ஒரு சுவையான தின்பண்டம் தன் பானிபூரி.
சாலையோரங்களில் திருவிழாக்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இது நல்ல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பானிபூரி விற்பனை செய்பவர்கள் பொதுவாக சால்னாவை வீட்டில் தயார் செய்து விடுவார்கள், ஆனால் பூரியை பெரும்பாலும் வெளியில் கடையில் வாங்கி தான் பயன்படுத்துகிறார்கள்.
எனவே இந்த பூரிகளை நீங்கள் தயவுசெய்து விற்பனையாளரிடம் விற்பதன் மூலம் நல்ல வருமானத்தை உங்களால் பெற முடியும்.
சரி இந்த தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவை, இதற்கான இயந்திரம் சந்தை வாய்ப்பு போன்ற அனைத்து விவரங்களையும் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
மூலப்பொருட்கள்
இந்த பூரி தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் மைதா அல்லது கோதுமை மாவு தேவைப்படும், அடுத்ததாக பூரிகளை தயாரிப்பதற்கு பின் தயாரித்த பூரிகளை பேக்கிங் செய்வதற்கு இயந்திரம் தேவைப்படும்.
அனைத்து மூலப்பொருட்களும் எளிதாக கிடைக்கும் எனவே தேவைகளுக்கு ஏற்ப மூலப் பொருட்களை நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்
இடவசதி
இது வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில் என்பதால் உங்கள் சமையலறையை கூட நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது ஒரு சிறிய அறை போதுமானது.
தேவைப்படும் இயந்திரம்
இந்த இயந்திரம் தற்பொழுது அனைத்து இணைய தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது, இந்த பானிபூரி இயந்திரத்தின் விலை 80,000/- விற்பனை செய்யப்படுகின்ற.
தொழில் பொருத்தவரை இயந்திரம் தான் அதிக முக்கியத்துவம் மற்றும் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கிறது.
தேவைப்படும் முதலீடு
இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
இயந்திரத்தை இயக்கும் முறை
இந்த இயந்திரத்தை இயக்குவது என்பது மிகவும் எளிமை இவை முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக் கூடிய ஒரு சிறிய இயந்திரம்.
நீங்கள் இயந்திரத்தில் தயாரித்த பூரிமாவுகளை வைத்தால் சிறு சிறு பூரிகளாக அழகாக கட் செய்து தரும்.
இவ்வாறு கட் செய்த சிறு சிறு பூரிகளை நன்றாக காய வைக்கவேண்டும், பிறகு எண்ணெயில் பொரித்தால் பூரி தயாராகிவிடும், இதனை நீங்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம் நேரடியாக.
சந்தை நிலவரம்
இந்த சுயதொழில் பொருத்தவரை எல்லா இடங்களிலும் பானிபூரி கடை வைத்து இருக்கிறார்கள், நீங்கள் அவர்களிடம் நேரடியாக சென்று நீங்கள் தயார் செய்த பூரிகளை உங்களுடைய விலைக்கு ஏற்ப விற்பனையை நீங்களே நிர்ணயிக்கலாம்.
பாகற்காயில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா
வருமானம்
நீங்கள் தயார் செய்த ஒரு கிலோ பானிபூரி விலை ரூபாய் 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம், இதன் மூலம் ஒரு கிலோவிற்கு 160 ரூபாய் வரை உங்களால் லாபம் பெற முடியும்.
5 best health benefits list in mushroom
உங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்களை பெற்ற பிறகு மாதம் மாதம் குறைந்தது 500 கிலோ பானிபூரி விற்பனை செய்யும் பொழுது உங்களுக்கு மாதம் 60,000 ரூபாய் வரை கட்டாயம் லாபம் கிடைக்கும்.