Best symptoms and 10 causes of heart attack

Best symptoms and 10 causes of heart attack

Best symptoms and 10 causes of heart attack

மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணங்கள்..!

உலகில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இப்பொழுது இருப்பது மாரடைப்பு மட்டுமே.

நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும், இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது மற்ற நாடுகளுக்கும் நம் நாட்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

மற்ற நாடுகளை காட்டிலும் நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரிடையே (30-45) அதிகம் பாதிப்பு மட்டுமின்றி அதிக விரியமும், பக்கவிளைவுகளையும், கடுமையாக, ஏற்படுகிறது.

மாரடைப்பு என்றால் என்ன, அது எவ்வாறு ஏற்படுகிறது, யாருக்கெல்லாம் இந்த மாரடைப்பு வரும், மாரடைப்பின் அறிகுறிகள் என்ன, அதை எப்படி குணப்படுத்துவது, என அனைத்து கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரையில் விடை தெரிந்து கொள்ளலாம்.

Best symptoms and 10 causes of heart attack

மாரடைப்பு என்றால் என்ன

இதய தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயமும் ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்கிறது.

இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் சுருங்கி விடுகிறது, இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது, இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது.

ரத்தக்குழாய்களில் அடைப்பு எப்படி தோன்றுகிறது

நமது ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது, இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் பிறந்து ஓரிரு ஆண்டுகளில் நூலாடை போல கொழுப்புச்சத்து படியே தொடங்குகிறது.

காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி ரத்த ஓட்டத்திற்கு தடை கற்களாக மாறுகிறது.

ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது, இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுவதும் அடைத்துக் கொள்கிறது.

Best symptoms and 10 causes of heart attack

மாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள்

மாரடைப்பில் இரண்டு வகை உள்ளது அவற்றில் ஒன்று உங்களால் கட்டுப்படுத்த முடிந்தவை மற்றொன்று உங்களால் கட்டுப்படுத்த முடியாதவை.

உடல் உழைப்பு இல்லாமை

அதிக கொலஸ்ட்ரால்

உயர் ரத்த அழுத்தம்

புகை பிடித்தல்

சர்க்கரை நோய்

அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு குறைவாக உடலில் இருத்தல்

மன அழுத்தம் அதிக கோபம் மற்றும் படபடப்பு மரபியல் காரணிகள்

குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு ஏற்படுவது

இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம் ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது.

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்

causes of heart attack நெஞ்சு வலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

அதிகமாக வியர்த்தல் குமட்டல் மற்றும் மயக்கம் வருவது போன்ற உணர்வு.

மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக் கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம் இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.

வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

மிகத் தீவிர நிலையில் இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து உயிர் இழப்பு ஏற்படலாம்.

வாயு தொல்லை அறிகுறிகள் என்ன..!

causes of heart attack மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக மாறுபடலாம் பொதுவாக மாரடைப்பு வரும் போது.

முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ, துவங்கி பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரித்துவிடும்.

Aluminum hydroxide tablet 5 best uses

சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம் இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறு ஒரு காரணத்திற்காக (ECG) பரிசோதனை செய்யும்போதுதான் தெரியவரும் இதற்கு அமைதியான மாரடைப்பு என்று பெயர்.

Leave a Reply

Your email address will not be published.