Best tips to get black hair in tamil 2022
வெள்ளையாக இருக்கும் தலைமுடியில் இந்த எண்ணெயை தடவினால் மட்டும் போதும் உடனடியாக மாற்றத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
சிறிய வயதிலேயே இப்போது தலைமுடி வெள்ளையாக மாற தொடங்கி விடுகிறது இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது மன அழுத்தம்.
மன அழுத்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் தலை முடி வளர்ச்சி, தலைமுடி நிறத்தில் கடுமையான மாற்றம் ஏற்படும்.
அதற்கு அடுத்தபடியாக தூக்கமின்மை பிரச்சனை இதனாலும் முடி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக தொடரும்.
ஊட்டச்சத்து பிரச்சினை கண்டிப்பாக தலைமுடி வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
தலைமுடிக்கு சரியான எண்ணெயை பயன்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களுக்கு மன அழுத்தம் என்பது குறையும், இதனைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெய் தயார் செய்வதற்கு தேவையான இயற்கை பொருட்கள்
Best tips to get black hair in tamil 2022
கருஞ்சீரகப்பொடி – 3 தேக்கரண்டி
மருதாணி இலை பொடி – 3 தேக்கரண்டி
அவுரி இலை பொடி – 3 தேக்கரண்டி
நெல்லிக்காய் பொடி – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 200ml
கறிவேப்பிலை – உங்களுக்கு தேவையான அளவு
இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கும் செய்முறை
Best tips to get black hair in tamil 2022 முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும் அதில் கருஞ்சீரகப் பொடி, நெல்லிக்காய் தூள் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும், கருமை நிறம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும், இந்த வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும் பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரக தூள் 3 தேக்கரண்டி மருதாணி தூள் 3 தேக்கரண்டி அவுரி இலை தூள் 3 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி 3 தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும், அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும் தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்துகொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வையுங்கள் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் சூடு வந்தவுடன் அந்த தண்ணீரில் கலந்து வைத்த கலவையை அந்த பாத்திரத்தில் வைக்கவும்.
15 முதல் 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும் இப்பொழுது எண்ணெய் குளிர்ந்ததும் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கையான தலைமுடிக்கு தேவையான எண்ணெய் தயாராகிவிட்டது.
இதனை பயன்படுத்தும் முறை
Best tips to get black hair in tamil 2022 நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெணை போலவே இந்த எண்ணெயும் தடவிக்கொள்ளலாம்.
தினமும் இந்த எண்ணெயைத் தடவி வர விரைவில் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.
நீங்கள் முடிந்தவரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது தான் நீங்கள் ஆரோக்கியமாகவும் தலைமுடி பிரச்சனை இல்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் இருக்க முடியும்.