Best tips to prevent gray hair in tamil 2022
தலையில் எப்பொழுதும் நரை முடி வராமல் முடி கருகருவென இருக்க இதனை பயன்படுத்தி பாருங்கள்..!
இன்றைய காலகட்டத்தில்இளைஞர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை என்றால் அது நரை முடி பிரச்சனை மட்டுமே.
எவ்வளவுதான் தலைமுடிக்கு செலவு செய்து வந்தாலும் நரை முடியை முழுமையாக நிற்க முடியவில்லை என புலம்பும் நபர்கள் அதிகம்.
நீங்கள் செலவு இல்லாமல் வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்து உங்களுடைய தலை முடியை கருமையாக மாற்றும் பொடுகு சிரங்கு போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்யலாம்.
நரை முடி வராமல் இருக்க பல்வேறு வகையான இயற்கை வழிகள் இருக்கிறது.
அதில் சில குறிப்பிட்ட வழிகளை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்க்கலாம்.
நரை முடி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான மூலப்பொருட்கள் என்ன என்பதைப் பற்றி முழுமையாக இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான மூலப்பொருட்கள் என்ன
வெந்தயம்
கருஞ்சீரகம்
சின்ன வெங்காயம்
தயிர்
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை
செம்பருத்தி பூ
நெல்லிக்காய்
முதலில் நீங்கள் வெந்தயம் மற்றும் கருங்சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் நன்கு ஊறவைத்து விடுங்கள் குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு ஊற வைத்த பொருட்கள் மற்றும் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ, தயிர், நெல்லிக்காய், இந்த பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இது ஒரு பேஸ்ட் போல் வந்தவுடன் பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு காட்டன் துணியை எடுத்து அந்தத் துணியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வடிகட்டி கொள்ளுங்கள்.
கடைசியாக நீங்கள் வடிகட்டி வைத்திருக்கும் பேஸ்டுடன் ஒரு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
Best tips to prevent gray hair in tamil 2022 இப்பொழுது உங்களுடைய முடிக்கு சிறந்த இயற்கையான மூலப்பொருள் தயாராகிவிட்டது.
அதன்பிறகு நீங்கள் தயார் செய்த மூலிகை உங்களுடைய தலைமுடியில் நன்றாக தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.
Best tips to prevent gray hair in tamil 2022 இது மாதிரி தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் உங்களுடைய தலைமுடி முழுவதும் கருமையாக மாறிவிடும்.
தலையில் இருக்கும் சொறி, சிரங்கு, பொடுகு, முழுவதும் நீங்கிவிடும். முடி உடைதல், முடி உதிர்தல், போன்ற பிரச்சனைகளும் சரியாகிவிடும்.