Black alkaline water benefits list 2021

கருப்பு ஆல்கலைன் தண்ணீர் ஏன் அவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது ஒரு லிட்டர்(Black alkaline water benefits list 2021)

மிகவும் அட்டகாசமான இந்திய கிரிக்கெட் வீரர்களில் முதன்மையான வீரராக இருப்பவர் விராட் கோலி அவர் தன் குடிக்கும் தண்ணீரை மிக கவனமாக தேர்வு செய்கிறார், அவர் குடிக்கும் கருப்பு ஆல்கலைன் தண்ணீரின் விலை கிட்டத்தட்ட ஒரு லிட்டர் இந்திய மதிப்பில் 4,000 ரூபாய் அந்த தண்ணீரில் அப்படி என்ன சிறப்பு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமீப காலமாக இந்திய திரையுலகினர் மற்றும் பிரபலமாக இருக்கும் நபர்கள் வெளியில் செல்லும்போது அதிக விலையில் விற்கப்படும் கருப்பு கலர் குடிநீர் வைத்திருப்பார்கள்.

இந்த புகைப்படம் சமூக வலைதளம் மற்றும் டிவி செய்திகளில் வெளிவரும், அடிக்கடி அப்படி என்ன அந்த தண்ணீரில் இருக்கிறது ஊட்டச் சத்துக்கள் பற்றியும் நியூட்ரிஷன்களால் அதிகமாக பேசப்படுகிறது. அப்படி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த குடிநீரை குடிக்க வேண்டியது அவசியம் என்ன.

Black alkaline water benefits list 2021

தண்ணீர் மிகவும் அனைவருக்கும் அவசியம்

தண்ணீர் குடிப்பது பற்றிய விழிப்புணர்வு இப்போது பள்ளிக்கூடத்திலிருந்து தொடங்கி விட்டது. ஏனெனில் உடலில் இருக்கும் கழிவுகளை முழுமையாக வெளியேற்றினால் மட்டுமே உடல் உறுப்புகள் சீராக இயங்கும், அதன் மூலம் சரும ஆரோக்கியம் முதல் தலை முடி வரை உடல் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இதில் இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தன்னுடைய உடற்பயிற்சியின்போது இந்த தண்ணீரை அடிக்கடி எடுத்துக்கொள்கிறார்.

ஆரோக்கியத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பவர் அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான தேர்வாக இருக்கிறது, அந்தவகையில் அவர் குடிக்கும் தண்ணீர் தான் இப்போது இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

Black alkaline water benefits list 2021

கருப்பு கலர் தண்ணீரின் நன்மைகள்

கருப்பு ஆல்கலைன் தண்ணீர் சிறப்பு வாய்ந்தது.அது  நீரோட்டத்துடன் வைத்திருக்கும்.

இதில் பி எச்(PH) அளவு மிக அதிகம் இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கிறது.

சருமத்தை பாதுகாக்க கூடியது, மனச்சோர்வை நீக்கும் தன்மை இருக்கிறது, இதுபோன்ற நிறைய நன்மைகளை கொண்டு இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் நீண்ட நேரம் உடல் சுறுசுறுப்பாக இயங்க தேவையான ஆற்றலை வழங்குகிறது.

இதன் சுவை சாதாரண தண்ணீரை போன்று தான் இருக்கும், ஆனால் இதை வெறும் தண்ணீர் என்று அவ்வளவு எளிதாக கருதக்கூடாது.

இந்த நீரில் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது அதனால் இது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.

உடலில் அமிலத்தன்மை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. அதிகமான மினரல்களும் (PH )அளவும் அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கழிவுகள் சேர்வதை தடுக்கிறது.

உடலில் நுண்ஊட்டச் சத்துக்களை உறிஞ்சுவதற்கு தேவையான ஆற்றலை இந்த தண்ணீர் கொடுக்கிறது.

இந்த நீரில் இருக்கக்கூடிய கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், போன்ற தனிமங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது உடலில்.

Click here to view our YouTube channel

இந்தக் குடிநீர் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் சுமார் 4,000/-ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இதனை ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கும் நபர்கள் வாங்கவே முடியாது.

Top 10 health benefits of eating fish

அதற்கு பதிலாக நம்முடைய பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய முறைகளை பயன்படுத்தினால் எந்த ஒரு பின் விளைவுகளும் இல்லாமல் செலவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான நீரை உடலுக்கு கொடுக்கலாம்.

Money transfer to another account Problem 2021

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் கூடவே துளசி சேர்த்துக்கொள்ளலாம், இதனால் புற்றுநோயை கூட எதிர்த்து போராட கூடிய அளவிற்கு அந்த நீரில் தனிமங்கள் சேர்ந்துவிடும்.

மண்பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து வந்தால் தண்ணீர் இயற்கையான முறையில் குளிரூட்டபடுவதால் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்துவதில்லை, அதுமட்டுமில்லாமல் இதயத் தமனிகளில் இதனால் கொழுப்புகள் படுவதில்லை.

ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் இதய தமனிகளில் கொழுப்பு படிகிறது மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் மாரடைப்பு கூட சில நேரங்கள் வரலாம் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரிய முறையை பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமாகவும் மற்றும் எந்த ஒரு செலவுகள் இல்லாமலும் எளிமையாக வாழ முடியும்.

Leave a Comment