தமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று மருத்துவ கல்வி இயக்குனர்(Black fungal Emergency Inspection in tn 2021)
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பைத் தொடர்ந்து தற்போது இன்னொரு அச்சம் தரக்கூடிய நோயாக கருப்பு பூஞ்சை உள்ளது இதுவரைக்கும் இந்த நோய் 400 பேருக்கு தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனர் தகவல் அளித்துள்ளார்.
மத்திய அரசு ஏற்கனவே கருப்பு பூஞ்சை நோய் தொற்றுநோயாக அறிவிக்க வேண்டும் என்று அவசரமாக மாநில அரசுகளுக்கு அறிக்கைகள் விட்டது. கருப்பு பூஞ்சை தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் நோயின் தன்மை தீவிரமாக மாறினால் அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது மட்டுமே நோயாளியை உயிர் பிழைக்க வைக்க முடியும்
தமிழகத்தில் கடந்த 15 தினங்களாகவே கருப்பு பூஞ்சை என்னும் கொடிய வகை நோய் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்ற செய்தி வெளிவந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் தற்போது கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
9,000 நபர்களை இந்தியாவில் இந்த நோய் தாக்கியுள்ளது இதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை ஏற்படுத்திய பாதிப்பு குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய்.
தமிழகத்தில் தற்போது இந்த நோய்க்கு 400 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனைத் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் ஆலோசனைக்கு பின்பு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணன்பாபு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ள 75 % நபர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் என்றும் இந்த நோய் இதற்கு முன்பு நாட்டில் இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
YouTube சேனல் பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்க
தனி வார்டு அமைக்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தனி வார்டு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தற்போது சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று கருப்பு பூஞ்சை நோய்க்கு தனி வார்டு அமைக்கப்பட உள்ளது மேலும் இதற்கான மருந்துகள் தற்போது தமிழக அரசிடம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.