கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை இரண்டில் எது ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன(Black fungus and white fungus Full Details2021)
கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் சூழலில் அதனை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை தொற்று நோயும் வேகமாக பரவி வருகிறது சமீபத்தில் இந்தியாவில் 4 மாநிலங்களில் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை மிகவும் ஆபத்தானது ஏனெனில் அது முதலில் ஒருவரின் கண்களை தாக்கிய பிறகு மூளையைத் தாக்கும் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கண் நீக்கினால் மட்டுமே அந்த நபரை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகிவிடுகிறது.
கருப்பு பூஞ்சை மக்களை பயமுறுத்திய சில நாட்களுக்கு பிறகு பீகார் மாநிலம் பாட்னாவில் வெள்ளை பூஞ்சையால் அங்கு 4 பேர் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளிவந்தது. கருப்பு பூஞ்சை விட வெள்ளை பூஞ்சை மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று எனவே அவர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை இரண்டில் மிகவும் ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
வெள்ளை புஞ்சை மிகவும் ஆபத்தாக இருப்பதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ளுறுப்புகளை கடுமையாக தாக்குகிறது நுரையீரல் மற்றும் பிற உடல் பாகங்கள் மீது கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது ஆபத்தான மற்றும் மூளைச், சுவாச அமைப்பு, செரிமான அமைப்பு, போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கலாம்.
கருப்பு புஞ்சை,முகம்,மூக்கு,கண் சுற்றுப்பாதை மற்றும் மூளை கூட பாதிக்கும் மேலும் பார்வை இழப்பிற்கு முக்கியமாக வழிவகுக்கிறது இது நுரையீரலுக்கு பரவுகிறது ஸ்டெராய்டுகள் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று டெல்லி AIIMS மருத்துவ இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
வெள்ளை புஞ்சை எந்த நபரை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் பல்வேறு நோய்கள் அந்த நபரை தாக்க ஆரம்பிக்கும் அதுபோலவே நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை தாக்குகிறது வெள்ளை புஞ்சை மேலும் சுகாதாரமற்ற முறை வெள்ளை பூஞ்சை பரவுவதற்கு அதிக வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால மருத்துவ சிகிச்சையில் ஸ்டெராய்டு எடுத்துக் கொண்டவர்கள் வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் இவர்களில் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
கருப்பு புஞ்சை யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்பு உள்ளது.
நீண்டகாலமாக ஒருவர் ஐ சி யூ -வில் இருந்தால் அந்த நபருக்கு கருப்பு பூஞ்சை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் நீரிழிவு,COVID-19 நோயாளிகள் மற்றும் ஸ்டெராய்டு நீண்டகாலமாக பயன்படுத்திவர்களுக்கு ஏற்படுவதற்கு ஆபத்துகள் அதிகமாக உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்.
சமீப நாட்களில் கருப்பு பூஞ்சை COVID-19 நோயிலிருந்து மீண்டு வருபவர்களை தாக்குகிறது என்று செய்திகள் வெளிவந்த நிலையில் நோய்த்தொற்று மூக்கின் மீது நிறமாற்றம், மங்கலான பார்வை, ஒரு பக்கம் முகம் வலி, பல் வலி, மார்பு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும் மேலும் சில நேரங்களில் இது நோயாளிகளுக்கு இரத்தத்தை இரும்புவதற்கு வழிவகுக்கும் சரியான நேரத்தில் இதைக் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய ஆபத்தை அந்த நோயாளிகளுக்கு இது ஏற்படுத்தி விடும்.
எங்கள் YOUTUBE பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
வெள்ளை பூஞ்சை நோயின் அறிகுறிகள்.
வெள்ளை பூஞ்சை நோய் கொரோனா வைரஸ் அறிகுறிகள்யுடன் மிகவும் ஒத்துப் போகிறது இதனால் நுரையீரல் பாதிக்கப்படலாம் இருமல், மார்வலி, மேலும் மூச்சு திணறலுக்கு வழிவகுக்கிறது இது தலைவலி, உடலில் வலிகள், நோய் தொற்றுகள், அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.