Bollywood actor Sushant Singh Death 2020
பாலிவுட் நடிகர் சுஷாந் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை அது கொலைதான் என மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்தார் இந்த தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
அவரது காதலி ரியா சக்கரவர்த்தி போதை பொருட்களை அதிக அளவு வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு இது தொடர்பாக வழக்கு ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் சுஷாந் சிங் தற்கொலை செய்யவில்லை, அது நிச்சயம் கொலை என ஒரு செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்.
சுஷாந் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.
கழுத்தில் இரண்டு மூன்று இடங்களில் காயங்கள் அடையாளங்கள் இருந்தன பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் உயர் அதிகாரிகள் உடலினை புகைப்படம் மட்டும் எடுக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.
உண்மையில் அது கொலைதான்
சுஷாந் சிங் உடலை நான் முதல் முதலில் பார்த்த போது அது தற்கொலை இல்லை கொலை என்று எனக்கு தெளிவாக தெரிந்தது.
Bollywood actor Sushant Singh Death 2020 ஆனால் மூத்த அதிகாரிகள் கூறியதால் போட்டோ மட்டும் எடுத்து விட்டு இரவில் பிரேத பரிசோதனை செய்து முடித்தோம்.
அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் என பலமுறை நான் எடுத்துக் கூறினேன் அதை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
கை கால்கள் உடைந்து இருந்தது
சுஷாந் சிங் உடல் சிதைந்த நிலையில் இருந்தது கை கால்கள் உடைந்து இருக்கும் போது அவர் எப்படி தூக்கில் தொங்கி இருக்க முடியும்.
இது சாத்தியமில்லாத ஒன்று ஒருவர் தூக்கில் தொங்கும் போது கழுத்தில் காணப்படும் தழும்புகள் வித்தியாசமாக இருக்கும் ஆனால் சுஷாந் சிங் கழுத்தில் காயங்கள் பல இருந்தன என்றார்.
Bollywood actor Sushant Singh Death 2020 இரண்டு ஆண்டுகளாக இதை மனதில் வைத்திருந்தேன் ஏனென்றால் உயர் அதிகாரிகளால் என்னுடைய வேலைக்கு பாதிப்பு வரும் என்று பயந்து வெளியில் சொல்லாமல் இருந்தேன்.
இப்போது கூப்பர் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி வந்த நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டதால் இப்போது இதை தைரியமாக வெளியில் சொல்கிறேன் என்றார் அந்த நபர்.