Bread business full details in tamil 2021

Bread business full details in tamil 2021

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் உணவு பழக்க வழக்கம் என்பது தலைகீழாக மாறி இருக்கிறது,  பாரம்பரிய உணவுக்கு பதிலாக பல்வேறு வகையான உணவுகளை இப்பொழுது எடுத்துக் கொள்கிறோம்.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு காலை உணவு என்றால் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், போன்ற உணவு வகைகள் தான் இருக்கும். ஆனால் இன்று அந்த அனைத்து உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.

குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை சரி இல்லை என்றால் மருத்துவர்கள் இந்த உணவுகளை பரிந்துரைப்பார்கள் ஏனென்றால் எளிதாக செரிமானம் ஆகக்கூடியது மற்றும் விலையும் குறைவு.

இந்த பிரட் இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது, விளைவு பெரிய நகரங்களில் மட்டும் இல்லாமல், சிறிய நகரங்களிலும், இதனுடைய விற்பனை என்பது இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதில் மைதா மாவு, சர்க்கரை, வனஸ்பதி, ஈஸ்ட், முட்டை, மற்றும் நெய், போன்ற மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது, இதன்மூலம் பிஸ்கெட் கேக் போன்றவற்றைத் தயாரிக்க முடியும்.

இதன் கூட மதிப்பு கூட்டு பொருட்களாக பப்ஸ், சிப்ஸ், போன்றவற்றையும் தயாரித்து சைடு பிசினஸ்யாக விற்பனை செய்து கொள்ளலாம்.

Bread business full details in tamil 2021

அரசிடம் அனுமதி பெற வேண்டும்

ஒரு உணவுப் பொருள் விற்பனை செய்ய வேண்டும் என்றால் இப்பொழுது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெறவேண்டும், பேக்கரி மூலம் நீங்கள் உணவு பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுத்தால் உணவு பதப்படுத்துதல் துறையின் கீழ் அனுமதி வாங்க வேண்டும்.

பிஎஸ்ஐ (BSI) தரச்சான்று வாங்கினால் மக்களுக்கு உங்கள் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Bread business full details in tamil 2021

தயாரிப்பு முறை

பிரெட் தயாரிப்பதற்கு குறைந்தபட்சம் 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்தபட்சம் ரூபாய் 3,00,000/- வரை இருக்கலாம்.

நீங்கள் விற்பனை செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக மக்கள் அதிகமாக சேருமிடம், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, அரசாங்க அலுவலகம், போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதனுடைய மதிப்பு மிக மிக அதிகமாக இருக்கும்.

இயந்திரங்கள் விலை

இயந்திரங்கள் மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவன், மோல்ட், மற்றும் டை போன்றவை வாங்க குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

நீங்கள் இணையதளம் மூலம்  இதனை தேடி வாங்கிக்கொள்ளலாம் தமிழ்நாட்டில் ஓசூர், கோயம்புத்தூர், போன்ற இடங்களில் இதற்கான பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது, அங்கு சென்று நீங்கள் நேரடியாக ஆர்டர் கொடுத்தால் விலை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தயாரிப்பதற்கு ஆகும் இதர செலவுகள்

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை அகலமான இடம் தேவைப்படும், தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய, அலங்கரிக்கப்பட்ட கடை, போன்றவற்றிற்கு செலவுகளுக்கு ஒரு 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இதனுடன் 20 HP மின்சாரமும் மோட்டார் 600 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நீங்கள் பயன்படுத்திய ஆக வேண்டும் அதற்கேற்றார்போல் நீங்கள் உங்களுடைய திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தொழிலுக்கு முக்கிய மூலப் பொருள்கள் மாவுதான் மைதா மற்றும் கோதுமை மாவு போன்ற மூலப்பொருட்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து 2 மாதத்திற்கு அளவில் கையிருப்பு வைத்திருக்கவேண்டும்.

சர்க்கரை, ஈஸ்ட் ,பால் பவுடர், உப்பு, நெய், முட்டை, கலர் பவுடர், போன்ற மூலப்பொருட்கள் எப்பொழுதும் கிடைக்குமாறு கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சிறு தொழில் செய்வதற்கு ஆகும் செலவுகள்

பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள், என குறைந்தபட்சம் 50,000/- ரூபாய் வரை ஆரம்ப செலவுகள் ஆகும்.

பிரட் தயாரிப்பு தொழிலை பொருத்தவரை தொடங்குவதற்கு சுமார் உங்களிடம் ஆரம்பத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.

சந்தை வாய்ப்புகள் இருக்கும் இடம்

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை இன்றைய காலகட்ட பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் இருந்து சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அது போன்ற நேரங்களில் பேக்கரியில் இருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்திற்கு நம்முடைய மக்கள் பழகிவிட்டார்கள், இதனால் நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், பேக்கரி தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

மிக கவனம் தேவை

இந்த தயாரிப்பு தொழில் பொருத்தவரை தயாரிக்கப்படும் பிரட் அன்று நீங்கள் விற்றுவிட வேண்டும் இல்லை என்றால் அடுத்த நாள் இதனுடைய மெதுமெதுவானா தன்மை மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதனை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும், பிரட் தயாரித்து விட்டால் 3 நாட்களுக்கு மேல் வைத்து வியாபாரம் செய்ய முடியாது.

Click here to view our YouTube channel

இதற்கு தேவையான வேலையாட்கள்

இந்த உற்பத்தித் திறனுக்கு ஏற்ப வேலை ஆட்கள் தேவைப்படும் குறைந்தபட்சம் 5 பேர் தேவைப்படலாம், விற்பனை செய்பவர், வேலை ஆட்களை பார்த்துக் கொள்ளக் கூடிய நபர், என சேர்த்தால் 5 பேர் தேவைப்படும், அதுமட்டுமில்லாமல் அனுபவமிக்க ஒரு மாஸ்டர் கட்டாயம் தேவை.

5 Best Symptoms that indicate lung problems

இந்தத் தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என முடிவு எடுத்தால் அதற்கு முதலில் அனுபவமிக்க நபரிடம் நீங்கள் சிறிது நாட்கள் வேலை செய்ய வேண்டும், அப்போதுதான் இதனை பற்றி முழுமையாக உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.

Leave a Comment