Breeding methods of white pigs best tips 2023

Breeding methods of white pigs best tips 2023

பன்றி இறைச்சிக்கு இப்பொழுது அதிக வரவேற்பு இருக்கிறது,பன்றி இறைச்சி கேரளா உட்பட சில மாநிலங்களில் முக்கியமான இறைச்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பன்றி இறைச்சிக்கான தேவை என்பது அதிகரிக்கிறது, பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓரளவிற்கு மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்.

இதனால் அவர்களுடைய தேர்வு பன்றி இறைச்சி, மீன், ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பக்கம் சென்றுள்ளது.

பன்றி இறைச்சி தேவை என்பது தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது, இதனுடைய உற்பத்தி என்பது மிக குறைவு.

நீங்கள் இந்த பன்றிகளை வளர்த்து விற்பனை செய்யலாம் அல்லது இறைச்சி விற்பனை செய்யலாம்.

இதனால் உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்,பன்றி பண்ணை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

Breeding methods of white pigs best tips 2023

பன்றி இனங்கள் தேர்வு செய்யும் முறை

வெண்பன்றிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக பிறப்பு எடை மற்றும் உயரிய இனத்திலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும், ஆண் பன்றிகளை ஒரே ஈனலில் அதிக எண்ணிக்கை குட்டிகளை ஈன்ற தாயிடமிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

பன்றி அமைவிடம் மற்றும் பண்ணை வீடு

பண்ணை வீடு மேட்டுப்பாங்கானதாக நீர் தேங்காமல், மழையால் பாதிப்பு இல்லாமல், அதிக சூரிய வெப்பம், நல்ல காற்றோட்ட வசதியுடன், வெளிச்சம் உள்ள இடமாக அமைதல் வேண்டும்.

விற்பனைக்கு எளிதாக போக்குவரத்து வசதி, மின்சார வசதி மற்றும் நல்ல குடிநீர் வசதி ,ஆகியவை மனதில்கொண்டு பன்றி பண்ணை அமைவிடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

7 Changes In Your Life By Having Regular Sex

பண்ணை வீடு மற்ற கால்நடை பண்ணைகளில் இருந்து குறைந்தபட்சம் 400 அடி தள்ளி இருக்க வேண்டும்.

பெட்டை பன்றிகளுக்கு தனி இடவசதி, குட்டி ஈனாத பன்றிகள், கன்றுகள் ஈனும் பன்றிகள், இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகள், என தனித்தனியே பண்ணை வீட்டு பிரிவுகள் இருக்க வேண்டும்.

Breeding methods of white pigs best tips 2023

பன்றி வளர்ப்புக்கு இடவசதி அளவுகள்

வளரும் பன்றிகள்  8-15 சதுர அடி

பருவம் அடைந்த பன்றிகள்  20 சதுர அடி

கிடா பன்றிகள்  65 சதுர அடி

பன்றி வளர்ப்பில் தீவனங்கள்

நீங்கள் பன்றிகளுக்கு தீவனம் தயாரிக்கும் போது குறைந்த விலையில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும்.

மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை, அரிசி அல்லது அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் தானிய வகைகள், தீவனம் தயாரிக்கும் போது முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தலாம்.

Breeding methods of white pigs best tips 2023 ஒரு புரதச்சத்துக்காக பிண்ணாக்கு வகைகள், கருவாட்டு தூள், அல்லது இறைச்சிதூள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தால் அல்லது அவைகளுக்கு பசுந்தீவனம் அளித்தல் வைட்டமின் பி சத்துக்களைக் கொடுக்க தேவையில்லை.

பன்றிகளுக்கு விலங்கு புரதம் அளிக்கப்படாவிட்டால் வைட்டமின் பி 12 தீவனத்துடன் கொடுக்கப்பட வேண்டும்.

எதிரி உயிரி மருந்துகள் ஒரு கிலோ கிராம் தீவனத்திற்கு 11 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து அளிக்கப்படவேண்டும், தாதுஉப்புக்கள் தீவனத்துடன் கலந்து அளிக்கப்படவேண்டும்.

பன்றிகளின் இனப்பெருக்கம்

Breeding methods of white pigs best tips 2023 பெண் பன்றிகள் 9 மாதங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடுகிறது, 110 முதல் 120 நாட்கள் வருடத்திற்கு 2 முறை குட்டிகள் ஈனும் ஒவ்வொருமுறையும் குறைந்தது 8 முதல் 12 குட்டிகள் வரை கிடைக்கும்.

சினை பருவ காலம் 2 முதல் 3 நாட்கள் வரை இருக்கும், இந்த காலத்தில் முதல் இரண்டு நாட்கள் பெண் பன்றிகளை ஆண் கிடா பன்றியுடன் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.

சினை பன்றி பராமரிப்பு முறைகள்

Breeding methods of white pigs best tips 2023 சினை பன்றிகள் குட்டி ஈனுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும், அறையை சுத்தமாகவும் வைக்கோல் தட்டை போன்றவற்றை பரப்பி சிறிது வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

காம்புகளில் பால் சுரந்த 24 மணி நேரத்திற்குள் பன்றி குட்டிகளை ஈன்று விடும் 2 முதல் 6 மணி நேரம் வரை எல்லா குட்டிகளையும் ஈன்று விடும்.

குட்டி ஈன்ற பிறகு 15 மணிநேரங்களுக்கு உணவு தேவை இல்லை, ஆனால் குடிநீர் கண்டிப்பாக இருக்க வேண்டும்,பின் சிறிது சிறிதாக தீவனம் கொடுத்து இரண்டு வாரங்களில் முழு தீவனம் கொடுக்க வேண்டும்.

பன்றிக் குட்டிகள் பராமரிப்பு

Breeding methods of white pigs best tips 2023 குட்டிகள் பிறந்தவுடன் தானாகவே எழுந்து பால் குடிக்க தொடங்கிவிடும்.

குட்டியை தாய் பன்றியுடன் முதல் இரண்டு மாதங்கள் வளர்க்க வேண்டும்.

இரண்டு வாரங்கள் முடிந்த உடன் பன்றிக்குட்டிகள் தாயுடன் சேர்த்து தீவனத்தை உட்கொள்ள தொடங்கும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரித்து தனித்தனி குழுவாக வளர்க்க வேண்டும்.

தாயிடமிருந்து பிரிக்கும் பொழுது குட்டிகளை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

what are the the best benefit budget 2023

நோய் தடுப்பு முறைகள்

Breeding methods of white pigs best tips 2023 பன்றிக் குட்டிகளுக்கு ரத்தசோகை நோய் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்து தேவையான அளவு கிடைக்க செய்ய வேண்டும்.

பன்றிகளை நல்ல சுத்தமான காற்றோட்டமான கொட்டகையில் வளர்க்க வேண்டும்.

முறையான ஆரோக்கியமான தீவனம் கொடுத்தால் மிக அவசியம்.

தண்ணீர் தீவனத்தொட்டி மற்றும் குட்டிபோடும் அறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக முக்கியம்.

Leave a Comment