பிரிட்டன் உளவாளிகளுக்குக் கிடைத்த முக்கியமான தகவல் வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸின் விசாரணை தீவிரம்(British spies believe wuhan covid-19 lab leak)
வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை நம்புவதாகவும் இதுகுறித்து அவர்கள் விசாரணையை நடத்தி வருவதாகவும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக எந்த ஒரு நாட்டிலும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை இந்த கொரோனா வைரஸ் குறித்த பல விஷயங்கள் இந்த உலகத்திற்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வைரஸை கட்டுப்படுத்த இப்பொழுது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா, சீனா, என உலகில் முன்னணியில் இருக்கும் நாடுகளிலுள்ள நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் கூட இன்னும் வைரஸின் தன்மை பற்றி முழுமையாக தகவல்கள் இந்த உலகிற்கு கிடைக்கவில்லை எனவே வைரஸ் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது முக்கியமாக வைரஸின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பல்வேறு சர்ச்சைகளை தினம்தோறும் உலகத்தில் வெளிவந்து கொண்டே உள்ளது.
வூஹான் நகரில் அமைந்துள்ள வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக முதலில் கூறப்பட்டது ஆனால் இந்த கருத்து தொடக்கத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தாலும் பின்னர் கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை உலக சுகாதார மையத்தின் ஆய்வாளர்களும் கூட ஆய்வு மையத்திலிருந்து பரவி இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.
இப்போது சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது அதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே கொரோனா ஓத்த அறிகுறிகளுடன் ஆய்வு மையத்திலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சீனா முதலில் 2019 டிசம்பர் 31ஆம் தேதி தான் கொரோனா பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல்கள் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கும் கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது பிரிட்டன் நாட்டில் உள்ள சண்டே டைம்ஸ் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை நம்புவதாகும் இதுகுறித்து பிரிட்டன் உளவாளிகள் தேவையான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க
வரும் காலங்களில் இந்த விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக பிரிட்டன் உளவு துறை முடிவு செய்துள்ளது இந்த விஷயம் குறித்து நன்கு அறிந்த ஒரு உயர் அதிகாரி தெரிவித்தது சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தோற்றம் குறித்து பிரிட்டன் உளவுத்துறைக்கு முக்கியமாக கிடைத்த ஒரு நம்பகமான தகவல்கள் காரணமாகவே வூஹான் வைராலஜி மையக் கோட்பாட்டை விசாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு முக்கிய அறிவிப்பை அமெரிக்க உளவுத்துறைக்கு வெளியிட்டார் கொரோனா தோற்றம் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனாலும் சீனா தொடர்ந்து வூஹான் வைராலஜி மையத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்புகள் இல்லை என மறுத்து வருகிறது.