Budhan peyarchi 12 zodiac best tips in tamil
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 27 முதல் இந்த ராசிகளுக்கு பணமழை பொழியும்..!
நவகிரகங்களின் புத்திக்காரன் என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான் நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
புதன் தற்போது சனி ஆளும் மகரராசியில் பயணித்து வருகிறார் இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி சனிபகவானின் அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார்.
சனி பகவானும், புதன் பகவானும் நட்பு கிரகங்கள் எனவே கும்ப ராசிக்கு செல்லும் புதன் அற்புதமான பலன்களை வழங்கப்போகிறார்.
புதன் பகவான் தகவல்தொடர்பு பேச்சு ஆகியவற்றிற்கு காரணமாக கருதப்படுவதால், புதன் பெயர்ச்சி தாக்கம், ஒரு நபரின் தகவல்தொடர்பு திறன் மற்றும் பேச்சில் இருக்கும்.
கும்பம் ராசிக்கு செல்லும் புதன் பகவான் அந்த ராசியில் மார்ச் 15-ஆம் தேதி வரை இருப்பார், இதனால் புதன் பெயர்ச்சி தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
மேஷ ராசி
மேஷ ராசியின் 11வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் முயற்சியால் பணம் வரவு அதிகரிக்கும்.
நிதி நிறுவனத்தில் இருப்பவர்கள் நல்ல அதிகப்படியான லாபத்தை பெறமுடியும், வணிகர்களுக்கு நல்ல திடமான மற்றும் லாபகரமான காலமாக இருக்கும்.
Budhan peyarchi 12 zodiac best tips in tamil ஊடகத் துறையில் இருப்பவர்கள் நல்ல பண வரவை எதிர்பார்க்கலாம்,சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும், திருமணமான தம்பதிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியின் 10வது வீட்டிற்கு புதன் செல்கிறார் இதனால் இந்த காலத்தில் பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.
பரம்பரை தொழிலில் இருக்கும் நபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், நிலுவையிலுள்ள வேலைகள் அனைத்தும் மிக வேகமாக முடிக்கப்படும்.
ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் அதிகமான லாபத்தை இந்த காலகட்டங்களில் பெற முடியும், உங்களுடைய நற்பெயர் பல மடங்கு அதிகரிக்கும்.
மிதுனம் ராசி
Budhan peyarchi 12 zodiac best tips in tamil மிதுன ராசியின் 9வது வீட்டிற்கு புதன் செல்கிறார் இதனால் இந்த காலத்தில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் உங்களுக்கு மரியாதையும் நற்பெயரும் இந்த காலகட்டங்களில் அதிகரிக்கும்.
வியாபாரத்திலும் முதலீடுகளிலும் நல்ல லாபம் கிடைக்கும் இது போன்ற காலங்களில் ஆன்மீகம் சுற்றுலா போன்றவை அதிகரிக்கும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் நட்புணர்வு பல மடங்கு அதிகரிக்கும்.
கடகம் ராசி
கடக ராசிக்கு 8வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சதி திட்டங்கள் செய்வார்கள் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலங்களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்,குறிப்பாக முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
சற்று நிதானமாக நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய காலகட்டம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
சிம்மம் ராசி
Budhan peyarchi 12 zodiac best tips in tamil சிம்மம் ராசியில் 7வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் நன்றாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு பல மடங்கு அதிகரிக்கும்.
இருப்பினும் இதுபோன்ற காலகட்டங்களில் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது, ஒவ்வொரு முடிவுகளையும் சற்று நிதானமாக சிந்தித்து முடிவு எடுத்தால் நல்லதாக இருக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசியின் 6வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் இந்த காலமானது சற்று சவாலானதாக இருக்கும் உங்களின் கடின உழைப்பு உங்களுக்கு நற்பெயரை பெற்றுக்கொடுக்கும்.
பணிபுரியும் நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், அதிக செலவுகள் உங்களுக்கு நிதி நிலையை மோசமாகும்.
புதிதாக எதையும் முதலீடு செய்ய வேண்டாம்,இது போன்ற காலகட்டங்களில் நீங்கள் நிதானமாக இருந்தால் மட்டும் போதும்.
துலாம் ராசி
Budhan peyarchi 12 zodiac best tips in tamil துலாம் ராசியில் 5வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் பத்திரிக்கை, சினிமா, ஊடகம், போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் நண்பர்களுடன் நேர்மையாக இருக்கவேண்டும், எதையும் மறைக்க வேண்டாம், இந்த காலகட்டங்களில் உங்கள் வேலையை மாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம் ராசி
விருச்சிக ராசியின் 4வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார், இதனால் பணியில் இருக்கும் நபர்கள் வெற்றி பெற வழக்கத்தைவிட அதிகமாக முயற்சிகளையும், கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் நீங்கள் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம்.
வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும், பரம்பரை சொத்துக்கள் சார்பாக பிரச்சனைகள் முடிவுக்கு வரும், புதிய வாகனம் வாங்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தனுசு ராசி
தனுசு ராசியின் 3வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் இக்காலத்தில் உறவினர்கள் நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள் உங்களுடன் பணிபுரியும் நபர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும் ஊடகம், பத்திரிகை, மார்க்கெட்டிங், அல்லது தகவல் தொடர்பு போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலகட்டம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
மகரம் ராசி
மகரம் ராசியின் 2வது வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் இக்காலத்தில் நீங்கள் மிகவும் மென்மையாக பேச வேண்டும் பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர வேண்டும்.
உங்கள் முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள் வணிகர்கள் இக்காலத்தில் அதில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.
நிதி ரீதியாக இக்காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும், பணியிடத்தில் உங்களுக்கு உழைப்பிற்கேற்ற சம்பளம் வழங்கப்படும், பணியிடம் மாற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது உங்களுக்கு.
கும்பம் ராசி
கும்பம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் பகவான் செல்கிறார் இதனால் இக்காலகட்டங்களில் கடினமான சூழ்நிலைகளிலிருந்து எளிதில் விடுபடுவீர்கள்.
வேலையை இழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்கவேண்டும்,உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகள் உங்களை மகிழ்ச்சியாக வைப்பார்கள்.
மீனம் ராசி
மீனம் ராசி 12வது வீட்டிற்கு புதன் செல்கிறார் இதனால் இக்காலகட்டங்களில் அதிக செலவுகள் செய்யாதீர்கள் இக்காலகட்டங்களில் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளது.
உங்கள் வருமானம் அதிகரிக்கலாம், வணிகர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது.
இந்த காலத்தில் பெரிய முதலீடுகள் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.