Central Crime Branch has summoned Senthil Balaji
செந்தில் பாலாஜியை விடாத துரத்தும் மோசடி வழக்குகள் ஜூலை 6ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் மத்திய குற்றப்பிரிவு அடுத்த கட்ட நடவடிக்கை..!
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பல நபர்களிடம் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக செந்தில் பாலாஜி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இதற்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜூலை 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் சமண அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் செந்தில் பாலாஜி.
2015 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 90 லட்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
சுமார் 2 கோடியை 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.
செந்தில் பாலாஜியின் அலுவலகம், வீடு, பண்ணை வீடு, உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வீட்டுக்கு சீல் வைத்தார்கள்.
பல ஆண்டு காலமாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.
தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில்
செந்தில் பாலாஜிக்கு கடந்த ஒரு மாதமாகவே சோதனை காலம் என்று சொல்லலாம்.
வருமான வரித்துறை அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர்கள் வீட்டில், பண்ணை வீட்டில், அலுவலகங்களில், திடீரென்று சோதனை நடத்தினார்கள்.
அதன்பிறகு அமலாக்க துறையும் செந்தில் பாலாஜி வீட்டில், தலைமை செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் திடீரென்று சோதனை நடத்தியது.
இதன்பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு.
தற்போது ஓய்வில் இருக்கிறார் சூழ்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜியை விடாது துரத்தும் வழக்கு
செந்தில் பாலாஜிக்கு எதிராக இந்த வழக்கை தொடர வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு க ஸ்டாலின் அவர்கள் அப்போதைய ஆளுநர் அவரிடம் நீண்ட அறிக்கை புகார் ஒன்றை ஆதாரத்துடன் கொடுத்தார்.
அப்பொழுது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் தினகரன் அணிக்கு சென்றதால் அவரை அதிமுக கொறடா தகுதி நீக்கம் செய்தார்.
அதன் பிறகு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி ஏற்படுத்திய ஊழல்கள் பற்றி விசாரிக்க எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் தனி காவல்துறை ஒன்று அமைக்கப்பட்டு.
தீவிரமாக விசாரணை நடத்தி குற்றப்பிரிவு உறுதி செய்யப்பட்டு வழக்கு உறுதி செய்யப்பட்டு சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு இப்பொழுது தீவிரமாக இருக்கிறது இரண்டு மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் ஒரு கட்டளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் தற்போது இந்த வழக்கு வருகின்ற ஜூலை 16ஆம் தேதிக்குள் கட்டாயம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த தகவல்களை மத்திய குற்றப்பிரிவு அமலாக்கத்துறை உள்ளிட்ட காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.
என்ற சூழ்நிலை இருப்பதால் செந்தில் பாலாஜி இப்போது இக்கட்டான சூழ்நிலை என்று சொல்லலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
30000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு முதல்வர் ஸ்டாலின்