சென்னை மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை 8 ஆண்டுகள் கடின உழைப்பின் மூலம் நிறைவேற்றிக் கொடுத்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.(Chennai new lake news 2020)
ஆண்டுதோறும் சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தால் அரசுக்கு மற்றும் மக்களுக்கு மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.இதனை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது ஆனால் அதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் தொலை நோக்கு பார்வை திட்டம் இதற்கு சரியான தீர்வைக் கொடுத்தது.
சென்னை மக்களின் குடிநீர் திட்டத்தை நிறை வேற்றும் நோக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.
8 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு மூலம் இந்த திட்டம் நிறைவேறியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்.
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், ஆகிய நான்கு ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது . எதிர்காலத்தில் இந்த நான்கு ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீரை கொண்டு சென்னை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்ற சூழலில் தமிழக அரசு உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் மக்கள் தொகை 77 லட்சமாக இருந்தது ஆனால் இன்று ஒரு கோடியை நெருங்கிவிட்டது .சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகையால் எதிர்காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் தொலை நோக்கு திட்டத்தால் புதிய ஏரி ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.
Super 7 scheme for india youth in tamil
ரூபாய் 380 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகை ஏரியையும் அதற்கு அருகிலுள்ள கண்ணன்கோட்டை ராஜன் ஏரியையும் ஒன்றாக இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 1500 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சென்னை மக்களின் நலனுக்காக செல்வி ஜெயலலிதா அவர்களால் பார்த்துப் பார்த்துக் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் இதுவும் ஒன்று.
ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்த திட்டத்தை சிறப்பாக தொடங்கி வைத்திருப்பார் .
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
21/11/2020 அன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.twitter