chettinad ennai kathirikai kulambu best 2 tips

Chettinad ennai kathirikai kulambu best 2 tips

சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி..!

இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் எளிமையான முறையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான வீட்டில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அசைவ உணவு இருக்கும் மற்ற நாட்களில் சைவ உணவுதான்.

அதிலும் தினமும் ரசம், புளிக்குழம்பு, சாம்பார், தக்காளி சட்னி, இது மாதிரியான உணவு வகைகள் மட்டுமே இருக்கும்.

தினமும் வித்தியாசமாகவும், சலிக்காமல் இருக்க வேண்டும் என்று சிந்திக்கக் கூடிய நபர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காய்கறிகள் இல்லை என்றால் கத்திரிக்காயை மட்டும் வைத்து எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எளிமையாக செய்யலாம் மிகுந்த சுவையாக இருக்கும்.

chettinad ennai kathirikai kulambu best 2 tips

தேவையான மூலப்பொருட்கள்

கத்திரிக்காய் – 10

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 02

திருகிய தேங்காய் – சிறிதளவு

சோம்பு – 1 தேக்கரண்டி

சீரகம்  – 1 தேக்கரண்டி

மிளகு  – சிறிதளவு

பூண்டு  – 8 பற்கள்

கடுகு – தேவையான அளவு

வெந்தயம் – தேவையான அளவு

புளிக்கரைசல் – சிறிய உருண்டை

நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – தேவையான அளவு

மல்லித்தூள்  – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

வர மிளகாய் – 5

செய்முறை எப்படி

chettinad ennai kathirikai kulambu best 2 tips

முதலில் வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் விட்டு சூடானதும் 1/2 டீஸ்பூன் மிளகு,1/2 சீரகம், நறுக்கிய 10 வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

அதனோடு 5 பல் பூண்டு, ஒரு தக்காளி, சிறிதளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதோடு 4 டீஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும், வதக்கிய பொருட்கள் எல்லாம் சிறிது நேரம் ஆற விடுங்கள், பிறகு மிக்ஸியில் அல்லது அம்மியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

chettinad ennai kathirikai kulambu best 2 tips

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் செய்முறை

மற்றொரு வாணலியில் 5 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 10 கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும், கத்தரிக்காய் தோல் சுருங்கும் வரை நன்றாக வதக்கவும்,வதக்கிய கத்திரிக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.

chettinad ennai kathirikai kulambu best 2 tips

செட்டிநாடு கத்திரிக்காய் குழம்பு செய்முறை

chettinad ennai kathirikai kulambu best 2 tips அதன் பிறகு கடாயில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும் அதில் 1/2 கடுகு,1/2 சீரகம்,1/2 வெந்தயம்,மிளகு சிறிதளவு, ஒரு கை அளவு கறிவேப்பிலையை, சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

அதன்பிறகு 10 சின்ன வெங்காயம் 5 பற்கள் பூண்டு சேர்த்து கலர் மாறும் வரை வதக்க வேண்டும், அதிக பிறகு நறுக்கிய 1 தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

Best 6 face shining tips homemade in tamil

சுவையான கத்திரிக்காய் குழம்பு செய்முறை

chettinad ennai kathirikai kulambu best 2 tips  அதன் பிறகு தேவையான அளவு 1/4 டீஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வதக்கிய பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவேண்டும், பின் கொதி வந்தவுடன் புளிக் கரைசலையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!

அதன்பிறகு கொதித்த பிறகு வதக்கி வைத்த கத்தரிக்காய் சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் கொதிக்கவிடுங்கள் எண்ணெய் பிரிந்த நிலை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்போது ருசியான சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயாராகிவிட்டது.

Leave a Comment