Chicken pox treatment at home best 5 tips
அம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம் என்ன..!
வெயில் காலத்தில் வெயிலின் உஷ்ணத்தின் காரணமாக அம்மைநோய் பல ஆண்டுகளாக குறிப்பாக கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் தோன்றும்.
இந்த நோய் குறுகிய நாட்களில் சரியாகி விடும் என்றாலும், அவற்றினால் ஏற்படும் தழும்புகள் மட்டும் அவ்வளவு சீக்கிரமாக மறைவதில்லை.
இருப்பினும் இந்த அம்மைத் தழும்புகள் மறைய இயற்கை வைத்தியம் உள்ளது, அவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மிக விரைவில் இந்த பிரச்சினை முழுவதும் சரிசெய்துவிடலாம்.
அம்மை தழும்பு மறைய எலுமிச்சை
நன்கு பழுத்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளவும் அதை குறுக்காக வெட்டவும் பின்பு அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும், தொடர்ந்து அடிக்கடி செய்துகொண்டே வந்தால் தழும்புகள் முற்றிலும் மறைந்துவிடும்.
முருங்கை இலை பயன்படுத்தலாம்
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலையை எடுத்து அவற்றை நன்கு பேஸ்ட் போல் அரைத்து அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக பூசவேண்டும்.
பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்து விடலாம், இவ்வாறு தினமும் செய்து வர, ஒரே வாரத்தில் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இயற்கை வைத்தியம் என்ன
அம்மைத் தழும்புகள் முழுவதும் மறைவதற்கு ஒரு சிறிய துண்டு மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை சிறிதளவு இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து.
அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் உலர விடவேண்டும்.
பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள், இப்படியே 3 நாட்களுக்கு தொடர்ந்து ஒருமுறை செய்து வந்தால் அம்மைத் தழும்புகள் முழுவதும் நீங்கிவிடும்.
இந்த முறையை வாரத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர அம்மைத் தழும்புகள் உடனே மறைந்துவிடும்.
Chicken pox treatment at home அம்மைத் தழும்புகள் மறைய இதுபோன்ற இயற்கை வைத்தியங்களை மட்டும் பின்பற்றுங்கள் இதனால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
செயற்கையாக விற்பனை செய்யப்படும் எந்த ஒரு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் அம்மைத் தழும்புகள் முழுமையாக மறையாது.
கோடைக் காலங்களில் பெரும்பாலான நபர்களுக்கு அம்மை நோய் ஏற்படுவது வழக்கம், இதனால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாது, மேலும் உடலில் சில நன்மைகளும் இதனால் ஏற்படும்.