Child Marriage Act full details in tamil 2022
குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்றால் என்ன அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் என்றால் என்ன அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
குழந்தைகளை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது,குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு என்ன தண்டனை.
திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமண வயது எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, போன்ற முழுமையான தகவல்களை இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சாதாரணமாக நடைபெற்று வந்தது இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.
இதனை கருத்தில் கொண்டு நம்மளுடைய அரசு குழந்தைகளுக்கு 100% இலவச கல்வி தர வேண்டும் அது மட்டுமில்லாமல் பெண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது திருமண வயதை நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்பொழுது குழந்தை திருமணம் என்பது ஒரு அளவுக்கு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லலாம் ஏனென்றால் மக்களிடத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.
அதுமட்டுமில்லாமல் ஏதோ ஒரு குழந்தைகளுக்கு திருமணம் செய்கிறார்கள் என்றால் அதனை பற்றி இலவசமாக புகார் தெரிவிக்க பல்வேறு இலவச எண்களை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கிறது.
குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006
குழந்தை திருமண தடை சட்டம் 1929ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்டது இருப்பினும் இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அப்போதைய இங்கிலாந்து அரசு கட்டாயமாக உத்தரவிட்டது இதனால் அந்த சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
அதன்பிறகு 1978ல் குழந்தை திருமண தடை சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை இந்திய அரசு கொண்டுவந்தது, அதன்படி குழந்தை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
குற்றம் புரிவோருக்கு 15 நாள் என்பது பெரிய தண்டனை இல்லை என்பதால் குற்றம் செய்வோரின் எண்ணிக்கை குறையவில்லை இதனால் இந்த சட்டத்தில் மீண்டும் 2006ஆம் ஆண்டு பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
அதன்படி குழந்தை திருமண தடைச் சட்டத்தின் பிரிவுகள் 9 10 11 ஆகியவற்றில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, இதில் திருமணம் நடத்தி வைப்பவர்கள் மட்டுமின்றி, உறவினர்கள் திருமண நிகழ்ச்சியைபார்த்து தடுக்க முயற்சிக்காத நபர்கள், என அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்ய இயலாது குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு குற்றவியல் நடுவர்கள் உத்தரவிடலாம்.
குழந்தை திருமணம் குறித்து தகவல் அல்லது புகார்கள் வழங்கப்பட்டால் காவல்துறை தாமதமின்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் ஆட்சியர், வட்டாட்சியர்கள்,காவல் துறையினர் உதவியுடன் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய பின் அந்தப் பெண் குழந்தை எங்க தங்க வைத்து பராமரிப்பது என்பதை குற்றவியல் நடுவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த சட்டங்களைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதுதான் இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
குழந்தை திருமணம் நடக்க என்ன காரணம்
பொதுவாக குழந்தை திருமணம் எதனால் ஏற்படுகிறது என்றால் குடும்பத்தில் பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், காதல் விவகாரம் காரணமாகவும் நடைபெறுகிறது.
18 வயதுக்கு குறைவாக உள்ள ஒரு பெண்ணும் 21 வயதுக்கு குறைவாக உள்ள ஒரு ஆணும் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என இந்திய அரசால் கருதப்படுகிறது.
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
குழந்தை பிறக்கும் காலத்தில் குழந்தை அல்லது தாய் இறந்து போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
குழந்தை ஊனமாக பிறக்கலாம்
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகள் செயல் இழந்து போவது அல்லது பலமிழந்து போவது நடக்கலாம்.
குறிப்பாக அந்தக் குழந்தையின் கல்வி முற்றிலும் தடைபட்டு விடும்.
குடும்ப வன்முறை காரணமாக அந்தக் குழந்தையின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்மறையாக ஏற்பட்டுவிடும்.
குழந்தை திருமண சட்டம் தண்டனை விவரங்கள்
குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 இன்படி என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது என்பதை இப்பொழுது பார்ப்போம், இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைபெறும் குழந்தைத் திருமணத்திற்கு பொருந்தும்.
இந்த சட்டத்தின்படி 25 வயது நிறைந்த ஆண் 18 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் சட்டப்படி அந்த ஆண் தண்டிக்கப்படுவார்.
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் உடலில் நிகழும்.
அவர்களுக்கு என்ன மாதிரியான இந்திய சட்டத்தின் படி தண்டனைகள் வழங்கப்படும் என்றால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் வழங்கப்படும்.
மேலும் குழந்தை திருமணம் செய்துவைக்கும் நபர்களுக்கும் இந்த தண்டனை வழங்கப்படும்.
Samosa making business profit full details2021
உங்கள் ஊரில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது என்றால் உடனடியாக 1098 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம், உங்களுடைய புகார்கள் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும்.