நீளமான அடர்த்தியான கூந்தல் வளர இலவங்கம்பட்டை பயன்படுத்தும் மூன்று வழிமுறைகள் இங்கே(Cinnamon helps in better hair growth 3 tips)
இன்றைய காலகட்டங்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி இளைய தலைமுறையினர் தங்களுடைய உடல் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகம் விரும்புகிறார்கள் அதிலும் குறிப்பாக தலைமுடி சார்ந்த விஷயங்களில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்
ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலைகளால் மிக குறைந்த வயதிலேயே முடி சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக இளைஞர்கள் சந்திக்க நேர்கிறது அதற்கு காரணம் சுற்றுச்சூழல் முதன்மையாக அமைகிறது
அதிக வேதியல் நிறைந்த எண்ணெய்கள் ஷாம்புகள் பயன்படுத்துவதால் தலைமுடி பாதிப்படைகிறது தலைமுடி என்பது மிகவும் மெலிதான இருக்கும் ஒரு உறுப்பு உடலில் இதற்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து கொடுத்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும்
தலைமுடிக்கு இயற்கையாக கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரஞ்சு பழம், தேங்காய் எண்ணெய், செம்பருத்தி பூ, மருதாணி, மூலிகை எண்ணெய், போன்றவைகளில் இலவங்கம்பட்டை அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது
இலவங்கம்பட்டை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பாக முடி கொட்டுதல் அடர்த்தி இல்லாத முடி ஆகியவை இலவங்கம்பட்டை பயன்படுத்தி இருக்க முடியும்
இலவங்கம்பட்டை மரம் முழுவதும் மருத்துவ குணம் நிரம்பியது என்று ஆதிகாலத்திலிருந்து சங்ககாலப் புலவர்கள் கூட இந்த மரத்தை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார் பல்வேறு இயற்கை மருந்துகளுக்கும் மற்றும் உணவில் நறுமணத்தினை அதிகரிப்பதற்கும் இலவங்கம்பட்டை பயன்படுத்தப்படுகிறது
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் தூண்டிவிடுகிறது இலவங்கம்பட்டை இப்பொழுது முடி சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பார்ப்போம்
இலவங்கம்பட்டை பூஞ்சை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் சிறந்தது என்பதால் பொடுகு பிரச்சினைகளில் வெகுவாக குறைகிறது உங்கள் வீட்டிலேயே எளிதாக இலவங்கம்பட்டை தைலத்தினை தயாரிக்க முடியும் அதை தலைக்கு பயன்படுத்துவதால் இரத்த சுழற்சி அதிகரித்து முடி அதிகமாக வளரரூம் மற்றும் முடி சார்ந்த பிரச்னைகள் வெகுவாக குறைய ஆரம்பித்துவிடும்
இலவங்கம்பட்டை மற்றும் தேங்காய்
இலவங்கம்பட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி புதிய முறையில் தைலம் தயாரிப்பது மிகவும் எளிது அதே நேரத்தில் அதன் சிறப்பம்சங்கள் மிகவும் நல்லது
நல்ல சுத்தமான இலவங்கம்பட்டை மற்றும் தூய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தேவையான அளவிற்கு இரண்டையும் ஒரே பாத்திரத்தில் நன்றாக கலக்க வேண்டும்
அதன்பிறகு அதனை உச்சந்தலையில் தேய்க்க வேண்டும் பின்பு குறைந்தது 30 நிமிடங்கள் கழித்து உங்கள் தலை முடியை மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும்
பிறகு சல்பேட் கலக்கப்படாத ஷாம்பை பயன்படுத்தி குளிக்கவேண்டும் இதன்மூலம் தலைமுடி கருப்பாக வளர்வதோடு முடிஉதிர்வருது பிரச்சனைகள் குறைக்கப்படுகிறது இதனை வாரத்திற்கு 1 அல்லது 3 முறை செய்யலாம்
இலவங்கப்பட்டை முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் கலப்பு
முட்டை மனித உடலுக்கு அதிக புரதச்சத்தை வழங்கும் முதன்மை உணவு அதே போல் தலை முடி வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது முட்டை இலவங்கம்பட்டையுடன் முட்டையை சேர்த்து குளித்து வந்தால் முடி உதிர்வுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது
நல்ல சுத்தமான தரமான இலவங்கம்பட்டை ஒரு முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் இதனை மூன்றையும் ஒரே பாத்திரத்தில் நன்றாக கலக்கவேண்டும் பின்பு பசை போன்று வந்த பிறகு உச்சந்தலையில் தேய்க்க வேண்டும் தலைமுடி முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும் சூடான மிதமான நீரில் சல்பேட் கலக்கப்படாத ஷாம்பை பயன்படுத்தி குளிக்கவேண்டும்
MOST READ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சத்து
இலவங்கப்பட்டை மற்றும் தேன் தேங்காய் எண்ணெய்
தேன் மனித உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து உணவு சுத்தமான இயற்கையான தேன் சாப்பிடுவதால் எந்த ஒரு நோயும் உடலில் ஏற்படாது என்று சங்க கால மன்னர்கள் கூட அறிந்துள்ளார்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
ஒரு டீ ஸ்பூன் இலவங்கம்பட்டை ஒரு டீ ஸ்பூன் தேன் மற்றும் சில துளி தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக ஒரு பசை போன்று வரும் வரை கலக்க வேண்டும்
Kisan Samman plan are you eligible 2021 new
அதனை உச்சந்தலையில் தேய்க்க வேண்டும் தலை முழுவதும் நன்றாக தேய்த்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும் பிறகு சில நிமிடங்கள் கழித்து சூடான மிதமான நீரில் சல்பேட் கலக்கப்படாத ஷாம்பை பயன்படுத்தி குளிக்கவேண்டும் இதனால் முடி சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்துவிடும்