கல்லூரிகள் நாட்டு வெடிகுண்டு வீச்சு கத்தி, அரிவாள், வெடிகுண்டு, என பயங்கரா ஆயுதத்துடன் மோதிக்கொண்ட மாணவர்கள்..!Clash between college students in Chennai

Clash between college students in Chennai

கல்லூரிகள் நாட்டு வெடிகுண்டு வீச்சு கத்தி, அரிவாள், வெடிகுண்டு, என பயங்கரா ஆயுதத்துடன் மோதிக்கொண்ட மாணவர்கள் சென்னையில் பிரபலமான கல்லூரியில் என்ன நடக்கிறது..!

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு கத்தி அறிவால் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் அதிக சத்தத்துடன் வெடித்ததால் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேளச்சேரியில் அமைந்துள்ள குரு நானக்கல்லூரி சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக இருக்கிறது,இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.

இந்த கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்குள் சிலருக்குள் யார் பெரியவர்கள் என்ற ரீதியில் கடுமையான மோதல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

அடிக்கடி இரு வேறு பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே இந்த கடுமையான மோதல் நடந்து வந்துள்ளது,இந்த நிலையில் கல்லூரியில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு அதிகமாகியுள்ளது.

அப்போது ஒரு தரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது,பலத்த சட்டத்துடன் வெடித்ததால் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளது,இந்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை சம்பவ இடத்தை தடவியல் ஆய்வாளர்கள் கொண்டு ஆய்வு செய்து வருகிறது.

வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா அல்லது அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசா என ஆய்வுக்கு அனுப்பிய பிறகு தெரியவரும்.

தற்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு மாணவர்களை காவல்துறை பிடித்து விசாரணை அழைத்து சென்றுள்ளார்கள்.

தற்போது கல்லூரி வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணைக்கு பிறகு தான் உண்மையில் எவ்வளவு வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வரும் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும்.

உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது

சென்னையில் பிரபலமான கல்லூரியில் அதிக சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததாக கூறப்படுவதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுவும் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய சம்பவமாக மாறி உள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

மாணவர்கள் பயங்கர ஆயுதம் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது,நிர்வாக திறமையற்ற ஆட்சியின் நடக்கிறது,என காட்டமான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

PM e Bus sewa scheme details in tamil 2023..!

தொப்பையை குறைக்க சிறந்த 5 பானங்கள்..!

பாஜக ஆட்சி பிரதமராகும் மோடி இந்திய கூட்டணிக்கு

Leave a Comment