Class 12 student murdered in Cuddalore
பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் குத்திக் கொலை பட்ட பகலில் பயங்கரம் என்ன காரணம்? அதிர்ந்த தமிழ்நாடு.
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி பேருந்து நிறுத்தம் இன்று காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
மேல் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு மாணவரும் பள்ளி செல்வதற்கு பேருந்துக்கு காத்திருந்தார்,இந்த நிலையில் பேருந்து நிறுத்தத்தில் ஜீவாவுக்கும் மற்றொரு நபருக்கும் திடீரென்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த நபர் ஜீபாவை அருகில் உள்ள ஓடை பகுதியில் பேசுவதற்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவர் பள்ளி மாணவன் ஜீவாவை கொலை செய்தது காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்து நிலையத்தில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் ஜீவாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கத்தியால் குத்தப்பட்ட ஜீவா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்,அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்,மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிய ஆனந்த் என்ற மின் வாரிய ஊழியரை காவல்துறை தேடிவருகிறார்கள்.
முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு நோக்கில் காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தி உள்ளது.
பள்ளி செல்ல காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் பட்ட பகலில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடுமையான ஒரு அதிவளையை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Types of business loan in India 2023
How to change signature and photo in pan card