Coconut fibre business full details 2022
தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுய தொழில் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் அதிகமான வரவேற்பு இருந்து கொண்டு இருக்கிறது.
நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுவதால் இந்த தொழிலுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.
நவீன எந்திரங்கள் மூலம் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது.
தொழில் வளர்ச்சியின் காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்கும் கயிறுகள் பயன்படுத்துவது வழக்கம் குறைந்துவிட்டது.
தேங்காய்நார் மதிப்பு எப்பொழுதும் அதிகரித்துக்கொண்டே போகிறது மேட் போன்றவை தயார் செய்யப்படுவதற்கு இந்த தொழிலுக்கு எதிர்காலம் பிரகாசமாக மாறிவிட்டது.
தேவையான யூனிட் அமைப்பு
இந்த தொழிலை தொடங்க சுமார் நான்கு மாதங்கள் தேவைப்படும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 140 டன் தேங்காய் நார் கயிறு யூனிட் தொடங்க 20 சென்ட் நிலம் தேவைப்படும்.
சொந்தமாக இடமிருந்தால் நல்லதாக அமையும் நிலம் இல்லாதவர்கள் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்து இந்த தொழிலை செய்யலாம்.
அலுவலகம் ஸ்டோர் ரூம் போன்றவைகளுக்காக 1,400 சதுர அடி செட் அமைக்க வேண்டும்.
தயாரிக்கும் முறை
காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறும் தயார் செய்யப்படுகிறது முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு நன்கு ஊற வைத்துவிட வேண்டும்.
2 அல்லது 3 மணி நேரம் கழித்து வில்லோயிங் எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் தூய்மையாக கிடைத்துவிடும்.
அதன்பிறகு அந்த நாரை சில்வரிங் மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால் விற்பனைக்கு தயாராகி விடும்.
மூலப்பொருட்கள் பற்றிய விவரங்கள்
இதற்கு தேங்காய் நார் தான் மூலப்பொருள் கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, மாவட்டங்களில்.
தென்னை மரங்கள் அதிகளவில் பயிரிடப்படுவதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை தேவையான அளவில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த தொழிலுக்கு 7 ஹெச்பி மின்சாரம் தேவைப்படும் தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழில் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் செலுத்திக் கொள்ளலாம்.
தேவையான வேலையாட்கள்
ஒரு ஷிப்ட் வேலை பார்க்க குறைந்த பட்சம் 10 திறமையான தொழிலாளர்கள் தேவைப்படும்,2 ஷிப்ட் என்று வரும்போது 20க்கும் மேற்பட்ட வேலை ஆட்கள் தேவைப்படும்.
மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் தேவைப்படும்.
90% பெண் தொழிலாளர்கள் மூலம் இந்த வேலையை செய்யலாம் விவசாயக் கூலித் தொழிலாளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தொழிலுக்கு தேவையான தண்ணீர்
தினமும் குறைந்தபட்சம் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லதாகவே அமையும்.
ஒருவேளை தண்ணீர் வசதி இருக்கும் இடம் பார்த்து நீங்கள் இந்த தொழிலை அமைக்க வேண்டும் தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் உங்களுக்கு இந்த தொழில் நடத்துவது நடத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.
தண்ணீர் மிக மிக அவசியம் இந்த தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை, ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் எளிமையாக விட்டுவிடலாம்.
தேங்காய் நார் மூலதனம் முழு விவரங்கள்
முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக 2 லட்ச ரூபாய் தேவைப்படும் இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள் 7 நாட்களுக்கான முடிக்கப்பட்ட கையிருப்புகள் மற்றும் 15 நாட்களுக்கு வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.
சிக்கனை விட வான்கோழி இறைச்சி ஆரோக்கியமானது தான்
சந்தை வாய்ப்பு
நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம்.
How to make natural bathing soap in tamil 2021
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை, போன்ற மாவட்டங்களில் இதனை வாங்கிக் கொள்வதற்கு வியாபாரிகள் இருக்கிறார்கள்.