Coir mat business full details in tamil 2022
தேங்காய் நார் கால் மிதியடி தயாரிப்பு தொழிலில் நல்ல லாபம் பெற முடியும்..!
புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பு அதாவது தேங்காய் நாரை பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய கால் மிதியடி.
இது சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது மேலும் மக்களிடமும் அதிக வரவேற்பு உள்ளது, என்பதால் புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று யோசனையில் இருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த சுய தொழில்.
இந்த தேங்காய் நாரில் கால் மிதியடி தயாரிப்பு தொழில் பொருத்தவரை, குறைந்த விலையில் கைகளால் இயங்கக்கூடிய இயந்திரம் போதும் தயார் செய்வதற்கு.
தானியங்கி இயந்திரம் மூலம் 115 கிலோ தேங்காய் நாரிலிருந்து ஒரு நாளில் 100 கிலோ கயிறு தயாரிக்க முடியும் அப்படி கயிறு தயார் செய்த பிறகு.
இந்த கயிறு வாங்கி சென்று கைகளால் இயக்கும் இயந்திரம் மூலம் நாமே கால் மிதியடி தயாரித்து விடலாம்.
தொழிலின் சிறப்பம்சங்கள்
பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கால் மிதியடிகள் இதற்கு மாற்றாக தேங்காய் நார் கால் மிதியடிகள் அதிக நாட்களுக்கு நல்லதாக அமையும்.
துணிகளால் தயாரிக்கப்படும் கால் மிதியடிகள் சீக்கிரமாகவே கிழிந்துவிடும், அதேசமயம் எளிதில் மக்கும் தன்மை உடையதால் இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
குறைந்த விலையில் இதனைத் தயாரிக்க முடியும் இதனுடைய மூலப்பொருட்கள் இயற்கையானவை குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது.
வரும் காலங்களில் எல்லா பொருட்களும் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பயன்படுத்தும் வகையில் அதற்கான சட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வந்துவிடும் அப்போது இதனுடைய தேவை என்பது அதிகமாக இருக்கும்.
இது ஒரு நிரந்தரமான வருமானம் தரக்கூடிய சுயதொழில் இந்த தொழிலை மக்கள் அதிக ஆர்வத்துடன் தொடங்க வேண்டுமென அரசு மானியத்துடன் இதற்கு கடன் பெற்று தருகிறது.
100% இயற்கை தயாரிப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
கால் மிதியடியுடன் வசம்பை சேர்த்து விட்டால் கால் வலி வராது உற்பத்தியில் ரசாயனங்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை முற்றிலும் இயற்கையானவை.
மத்திய கயிறு வாரியதிலிருந்து மிதியடிகள் தயாரிப்பதற்கு இலவசமாக பயிற்சியும் வழங்கப்படுகிறது, இதை சுய தொழிலாக தொடங்கும் பட்சத்தில் இதற்கு மானியமும் கிடைக்கும்.
இதற்கு தேவையான முதலீடு
மூலப்பொருட்கள் தேங்காய்நார் கயிறு ஒரு நாளைக்கு குறைந்தது 100 கிலோ தேவைப்படும், ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வேலை நாட்கள் என எடுத்துக்கொண்டால் 2,500 கிலோ கயிறு தேவைப்படும்.
ஒரு கிலோ தேங்காய் நார் கயிற்றின் விலை குறைந்தபட்சம் 50 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு 2500 கிலோ x 50=1,25,000 ரூபாய் மூல பொருட்களுக்கு தேவைப்படும்.
மொத்தம் ரூபாய் 3 லட்சம் வரை நீங்கள் இதனை விற்பனை செய்யலாம்.
கால் மிதியடி தயாரிக்கும் முறை
கைகளால் இயக்கப்படுவது இது சுலபம் கைகளால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் குறைந்தபட்சம் 4 பேர் வரை வேலை செய்யலாம் 2 நபர்கள் பினிஷிங் வேலை செய்ய வேண்டும்.
உங்கள் கிட்னி ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள்.
கயிற்றை இயந்திரத்தின் ஒரு பகுதியில் கொடுத்தால் பின்னப்பட்டு கால் மிதியடி தயாராகி வெளியே வந்துவிடும்.
இவ்வாறு 4 நபர்கள் சேர்ந்து ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 கிலோ கயிற்றில் 200 கால் மிதியடிகள் தயார் செய்ய முடியும்.
Fuel price hike coming weeks india 2022
உங்களுடைய திறமைக்கு ஏற்ப கால் மிதியடிகளை தயார் செய்யலாம் சந்தையில் மொத்த விலைக்கு ரூபாய் 80 முதல் 90 வரை நிர்ணயிக்கப்படுகிறது.
நீங்கள் அதிகபட்சம் 90 ரூபாய் என நிர்ணயம் செய்தால் உங்களுக்கான லாபம் என்பது அதிகமாக கிடைக்கும்.