Consumer Protection Act Best tips 2022

Consumer Protection Act Best tips 2022

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

இந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் ஒரு வணிக அல்லது தொழில் செய்தால் கட்டாயம் அதற்கு இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஏனென்றால் இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே சட்டங்கள் மற்றும் அதற்கான சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.

நீங்கள் இந்தியாவில் இருக்கும் சட்டங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்கும்.

உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் கட்டாயம் விழிப்புணர்வு பலன் கொடுக்கும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன

Consumer Protection Act Best tips 2022 பொருட்களையும் சேவைகளையும் கொள்முதல் செய்து பயன்படுத்துவது நுகர்வோர் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது எந்த ஒரு பொருளையும் வாங்கினாலும் அவர் நுகர்வோர் ஆகிவிடுவார்.

எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு குளிர்பானம் வாங்கினால் என்றால் நீங்கள் ஒரு நுகர்வோர்.

மறுவிற்பனை அல்லது வணிக நோக்கங்களுக்காக பொருட்களை பெறும் எந்த ஒரு நபரும் நுகர்வோர் இல்லை.

நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும், நுகரும்போது அவர்களுக்கு உள்ள உரிமைகளை நுகர்வோர் உரிமைகள் என்று அழைக்கப்படுகிறது.

காலத்திற்குக் காலம் பல்வேறு பட்ட முறைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்படுகிறது.

Consumer Protection Act Best tips 2022

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

Consumer Protection Act Best tips 2022 இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வோர் தன்மையை பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டம் டிசம்பர் 1986,1987 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்தது, இந்த நுகர்வோர்ர் பாதுகாப்பு சட்டம் 1991 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மறு அறிவிப்பு வெளிவந்தன.

மேலும் இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகளும் முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டிசம்பர் 2002 இல் புதிய திட்டங்கள் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

2003 மார்ச் 15 அன்று புதிய பரிமாணங்களுடன் இந்தியாவில் அமலுக்கு வந்தது, இதுபோல் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளை நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் என்று அழைக்கப்படுகிறது.

நுகர்வோர் நீதிமன்றம்

Consumer Protection Act Best tips 2022  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது நுகர்வோர் பிரச்சனைகள் சேவை குறைபாடுகள், வணிக நடைமுறைகள் மற்றும் நேர்மையற்ற வணிக முறையில் போன்றவற்றிற்கு சரியான தீர்வு தரும் சட்டமாக இருக்கிறது.

நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட அதாவது புகார் கொடுக்கும் நபர் அவருக்கு அவரே வாதிட்டு நீதி பெற முடியும்.

நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள், மருத்துவ குறைபாடுகள், வீடுகட்டி கொடுப்பதால் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகள் மற்றும் வங்கிகள் போன்றவற்றை, உள்ளடக்கிய பிரச்சனைகளுக்கு நீதிகேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் 90% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.

நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது புகார்கள் இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் எம்ஆர்பி (MRP) குறிப்பிடாமல் பொருட்களை விற்பது எம்ஆர்பி கே (MRP) அதிகமாக பொருட்களை விற்பது, சேவை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தில் சரியாக காப்பீடு வழங்காமல் இருப்பது.

தனியார் மருத்துவ சேவைகளில் ஏற்படும் குறைபாடுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்படும் பிரச்சினைகள், புகார்கள், போன்றவற்றிற்கு குறைதீர் ஆணையம் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும்.

Consumer Protection Act Best tips 2022

நுகர்வோருக்கான 6 உரிமைகள் இருக்கிறது

Consumer Protection Act Best tips 2022 நம் நாட்டில் நுகர்வோருக்கான 6 உரிமைகள் இருக்கிறது

தேவையான பொருட்களை தேர்வு செய்யும் முறை

அனைத்து வகையான பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.

அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கான உரிமை.

நுகர்வோர் நலன் பற்றி அனைத்து முடிவு எடுக்கும் நடைமுறைகளில் கேட்கப்படும் உரிமை.

நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் போது அதற்கான தீர்வு பெறும் உரிமை.

நுகர்வோர் கல்வியறிவை நிறைவு செய்வதற்கான உரிமை.

நீதிமன்ற விதிகள் என்ன நுகர்வோருக்கு

Consumer Protection Act Best tips 2022  இந்த சட்டத்தின் மூலம் ஒரு குறை எழுந்து 2ஆண்டுகள் வரை புகார்கள் பதிவு செய்யலாம் 2 ஆண்டுகளுக்கு மேலான புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் தங்களுடைய குறைகளையும் அதற்கு அவர்கள் கூறும் தீர்வுகளையும் சரியாக விவாதித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

Poppy seeds 5 amazing benefits in tamil

இதுபோன்ற செய்வதன்மூலம் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை, இது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கு நல்ல முயற்சியாக இருக்கும்.

நீங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் வரவில்லை என்றால், நீங்கள் நுகர்வோர் சட்டத்தின் கீழ், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் நீங்கள் புகார் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!

நீங்கள் அதிகபட்சம் ரூபாய் 1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாவட்ட குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

ரூபாய் 1 கோடியிலிருந்து ரூபாய் 10 கோடி வரை இழப்பீடு உள்ள புகார்களை மாநில நுகர்வோர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Leave a Comment