Cooperative Bank 5 jewelry loan full details

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி யாருக்கு அமைச்சர் பெரியசாமி பேட்டி(Cooperative Bank 5 jewelry loan full details)

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் பெற்ற நபர்களில்  முறைகேடுகள் நடந்திருக்கிறது.  எனவே அதை ஆராய்ந்து நிச்சயமாக 5 சவரனுக்கு குறைவாக வைத்திருக்கும்  நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000/- வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார் அதன்படி நிச்சயமாக இனி வரும் மாதங்களில் செயல்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

சரியான நபர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும்

இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கு கடுமையான நிபந்தனைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்கடன் முந்தைய அரசால் கடந்த ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் கடன்காரர்கள் அனைவருக்கும் கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்த நிலையில் பயிர் கடன் தள்ளுபடி கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற பலரும் மென்மேலும் பலனடைந்திருக்கிறார்கள்.

Cooperative Bank 5 jewelry loan full details

நகை கடன் தள்ளுபடி பற்றிய விவரம்

பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, அறிவிப்பு போன்றவற்றால் கூட்டுறவு சங்கங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அடமானம் வைத்தாவர்கள் நகைகளை மீட்க தயங்கி வருகிறார்கள்.

எனவே கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் முடிந்த பிறகும் கூட செலுத்தாமல் பல ஆயிரம் பேர் உள்ளார்கள். இதனால் பல சங்கங்களில் அன்றாட வரவு செலவு வங்கி பணியாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் தமிழக கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது.

தமிழக அரசால் முடியாது

கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் முற்றிலும் முடங்கியுள்ளது கொரோனா வைரசால். இதனால் நகை கடன் தள்ளுபடி வழங்கும் பட்சத்தில் அதற்குரிய சரியான தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.

Click here to view our YouTube channel

அவ்வாறு தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்படும் நகை கடன் தொகை சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் இந்த தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதற்கான  நிதி  தமிழக அரசிடம் இல்லை.

Cooperative Bank 5 jewelry loan full details

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்

கொரோனா நிவாரணமாக ரூ 4000/- உதவித்தொகை வழங்கியதில் கடுமையான எதிர்ப்புகளை தமிழக அரசு சந்தித்தது காரணம் அரசு ஊழியர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டது தான். எனவே நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசு ஊழியர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best 8 Health benefits of salmon in Tamil

அதேபோல் முன்பு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் உயர் வருமானம் பெறுபவர்கள் என பிரிக்கப்பட்டு அவர்களையும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. எந்த ஒரு நிபந்தனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment