கொரோனா மூன்றாம் அலை இப்பொழுது பிரச்சனை இல்லையா(Corona 3rd wave in India symptoms in tamil)
கொரோனா வைரஸின் 2ம் அலை முழுமையாக நிறைவடையாத நிலையில் இப்பொழுது இந்தியாவில் மூன்றாம் அலை தொடக்கத்தின் அறிகுறிகள் தொடங்கிவிட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை மூன்றாம் அலை இந்த மாதத்தின் இறுதியில் தொடங்கக் கூடும் என்று மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் தினசரி 40,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது அதில் 70% கேரளாவில் மட்டுமே முக்கியமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் பதியப்படும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை முழுமையாக குறைந்துள்ளது.
மின்னல் வேகத்தில் கேரளாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒரு அபாய முன்னெச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் என்னவென்றால் கேரளாவிலிருந்து அதிக கொரோனா நோய் தொற்று பாதிப்பு இரு மாநிலங்களுக்கும் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, இதனால் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளது.
முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கேரளா இரண்டாவது அலையில் சிக்கித் தவிக்கிறது இப்பொழுது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்திய நான்காம் கட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சராசரியாக 67.6 சதவீத மக்கள் கொரோனா நோய்கக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 24 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது மேலும் 25 சதவீதத்திற்கு அதிகமான ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
what are the benefits of eating crab and nutrition
இந்த முடிவுகள், இந்திய சமூக நோய் எதிர்ப்பு நிலையை நெருங்கி வருகிறது என்னும் எண்ணத்தை ஏற்படுத்துவது போல் இருக்கின்றன. உண்மை என்னவென்றால் 21 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் வசிப்பவர்களில் 29,000 பேரிடம் 72,000 க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களிடமம் மேற்கொள்ளப்பட்ட சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளாகும்.
Click here to view YouTube channel
மூன்றாம் அலை வருவது என்பது ஒரு உண்மையான விஷயம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்குப் பிறகு இந்தியாவில் மக்களிடம் கொரோனா வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் 80 சதவீத அளவிற்கு அதிகரிக்கும்.
Top 5 benefits of eating crab in tamil
அதுமட்டுமில்லாமல் இந்த நோய் இந்தியாவில் எப்போதும் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும் என்பது ஒரு உண்மையான விஷயமாகும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்கும்.