புதிய வகை கொரோனா வைரஸ் யாரையெல்லாம் எளிதில் தாக்கும் உஷாராக இருக்க வேண்டிய நபர்கள் யார்.(Coronavirus prevention Best 5 tips in Tamil)
உலகை மறுபடியும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் இதுவரைக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ,இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது ஆனால் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசிகள் செயல்படுமா என்ற சந்தேகத்தை இப்பொழுது நம்முடைய எழுந்துள்ளது.
காரணம் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70% அதி வேகமாக பரவக்கூடியது என்ற ஆராய்ச்சி முடிவு மக்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஆறு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இதனால் பொருளாதாரம் என்பது முற்றிலும் சரிந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான ஆராய்ச்சி இன்னும் வெளிவராத நிலையில் இங்கிலாந்தில் மரபணு மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் அந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் 30 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
20 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு இந்த வைரஸ் தீங்குகளை விளைவிக்கும். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
பழைய வகை கொரோனா வைரஸின் அனைத்து அறிகுறிகளும் புதிய வைரஸின் அறிகுறிகளில் பொருந்தும். சமூகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் மிகவும் ஆபத்தாக அமைகிறது.
விஞ்ஞானரீதியாக B .1.1.7 என அழைக்கப்படும் புதிய வகை கொரோன வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடும் மற்றும் 20 வயதிற்கு குறைவாக இருக்கும் நபர்களை அதிகமாக தாக்கக் கூடும் என்பதால் இது முன்பை விட இப்பொழுது அதிக வீரியம் மிக்கதாக இருக்கக்கூடும்.
இளைய வயதில் இருப்பவர்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உலகம் முழுவதும் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்கு தடுப்பூசிகள் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும் ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை சமூகத்தில் முன்னணியில் இருக்கும் மக்களுக்கு செலுத்துவார்கள் மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள், காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
குறைந்தது ஆறு மாதங்களாவது தேவைப்படும் இளைஞர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு இதனால் இளைஞர்களை அதிக அளவில் வைரஸ் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி இளைஞர்களை பாதுகாக்குமா.
வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் இதனால் அவர்களை வைரஸ்கள் எளிதில் தாக்கும் ஆனால் இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் ஆனாலும் வைரஸ் தாக்கும்.
இளைஞர்களை வைரஸ் தாக்கினால் உடல் உபாதைகள் குறைவாக ஏற்படும் மற்றும் மரணம் என்பது சிறிய அளவில் நிகழும் ஆனால் வைரஸ் பரவுவது மிக வேகமாக இருக்கும்.
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் 70 சதவீதத்திற்கு மிக வேகமாக பரவக்கூடியது இது இளைஞர்களிடம் பரவினால் முன்பை விட இப்பொழுது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
நரம்பு, த்ரோம்போஸிஸ், கார்டியாக், மயோபதி, நுரையீரல் வடு உள்ளிட்ட பல சிக்கல்களை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழுக்களில் முதலில் குழந்தைகள் குழுக்கள் தான் உள்ளது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் உருவாக்கப்படவில்லை மற்றும் உருவாக்கப்பட்டாலும் அதற்கு உலக நாடுகள் ஒப்புதல் அளிக்க நீண்ட காலமாகும் மேலும் மருத்துவ பரிசோதனைகள் என்பது குழந்தைகளுக்கு மிகச் சிக்கலாக அமையும்.
அழகான பளபளப்பான கூந்தலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் .
சரியான தீர்வு இதற்கு எப்பொழுது.
நமது அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இதில் இருந்து காப்பாற்ற முடியும் அடிக்கடி கை கழுவுதல், இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்ய வேண்டும், மற்றும் 7 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்கவேண்டும்.Join us our telegram group