தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய உலகின் 90 நாடுகள் கூட்டு அறிக்கை வெளியீடு மேலும் பதற்றம் அதிகரிக்கிறது(Countries new news against the Taliban 2021)
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன்கள் கைப்பற்றியவுடன் அங்கு இருக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள்.
குறிப்பாக அமெரிக்க படைகளுக்கு உதவிய பொதுமக்கள் அவசரஅவசரமாக தங்களுடைய சொத்துக்களை கூட விட்டு வெளியேறுகிறார்கள்.
தாலிபான்கள் ஆட்சி செய்தால் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் அதுமட்டுமில்லாமல் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறார்கள் தாலிபான்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற நினைப்பவர்களை தடுக்க மாட்டோம் என தாலிபான்கள் ஒரு வாக்குறுதி அளித்து உள்ளார்கள் ஊடகங்கள் மூலம்.
இதனை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென 90 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஒரு புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
ஆப்கானில் அமெரிக்க ராணுவ படைகள் தலிபான்களுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் மூலம் வெளியேற தொடங்கியதை அடுத்து தாலிபான்கள் தீவிர நடவடிக்கைகளில் மூலம் 3 நாட்களில் அந்த நாட்டை கைப்பற்றினார்கள்.
இது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனென்றால் தாலிபான்கள் வேகம் அந்த அளவிற்கு இருந்தது.
இதனால் ஆப்கான் நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்று வருகிறார்கள், அதனால் ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விமானநிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இதனால் 100 மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்
இந்த கோர சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் குண்டுவெடிப்பிற்கு கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்கா இப்பொழுது ஒரு அறிக்கையை அவசரமாக வெளியிட்டுள்ளது மீண்டும் காபூல் விமான நிலையத்தில் ஒரு தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்துள்ளது.
இப்பொழுது உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஆப்கனில் இருந்து வெளியேறி நினைப்பவர்கள் வெளியேறலாம் அதனை நாங்கள் தடுக்க மாட்டோம் என தாலிபன் தரப்பிலிருந்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
Click here to view our YouTube channel
இது தொடர்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
What are the 5 symptoms of colorectal cancer
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற நினைப்பவர்களை தாலிபான்கள் ஒருபோதும் தடுக்கக் கூடாது இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.