Covid 19 booster vaccine some doubts in tamil
கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி குறித்து பலரது மனதில் எழும் பல்வேறு கேள்விகளும் அதற்கான பதில்களும்..!
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் அலை பெரும் பீதியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரசின் தாக்கம் மோசமான அளவில் உள்ளது கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வழுக்குகள் குறைந்து வந்த நிலையில்.
தற்போது திடீரென வழக்குகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது, இதனைப் பார்க்கும்போது பலரது மனதில் பல்வேறு வகையான அச்சங்களும் கேள்விகள் எழுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் தென்ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட covid-19 புதிய மாறுபாடு உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வருகிறது.
உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த வகை கொரோனா வைரஸ் ஓமிக்ரான் உள்ளது இதனால் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு வருகிறது.
மூன்றாவது தடுப்பூசி ஏன்
மூன்றாவது அதாவது பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது, சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியும் அதிவேகமாக மக்களுக்கு செலுத்தி வருகிறது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பார்க்கும்போது அது முற்றிலும் மாறுபாடு தெரிகிறது, அதாவது மூன்றாம் அலையை கட்டுப்படுத்த பூஸ்டர் போட வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தக் covid-19 பூஸ்டர் டோஸ் 2022ஆம் ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கும் மற்றும் வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பிரச்சாரத்தின் போது இதற்கான சான்றிதழ் விவரங்களை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது,22 நோய்கள் அரசின் கூட்டு நோய்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றில் சில பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்
சிறுநீரக பாதிப்பு
இதயநோய்
ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை
புற்றுநோய்
சிரோசிஸ்
சிக்கிள் செல் நோய்களில் நீண்டகால பயன்பாடு
நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள்
தசை சிதைவு
சுவாச அமைப்பில் ஆட்சி தாக்குதல்
செவிடு, குருடு, தன்மை போன்ற பல குறைபாடுகள்
கடுமையான நோயினால் இரண்டு வருடங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்.
இப்போது பூஸ்டர் டோஸ் தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்வோம்
எந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
பூஸ்டர் டோஸ் என்பது நீங்கள் முதல் இரண்டு தடுப்பூசிகளுக்கு எந்த தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டீர்களோ அதையேசெலுத்திக் கொள்ள வேண்டும் கட்டாயம்.
எவ்வளவு இடைவெளி வேண்டும்
நீங்கள் இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு குறைந்தபட்சம் 9 மாதம் இடைவெளிக்குப் பின்பு பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.
முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட பிறகு அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பூஸ்டர் தடுப்பூசி போடும்போது எடுக்க வேண்டும்.
தினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால்
மேலும் வெறும் வயிற்றில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளக்கூடாது மேலும் தடுப்பூசி போட செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தடுப்பூசிக்கு பிறகு நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் இது கட்டாயம்.
Aloe vera for weight loss full details 2022
தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் வருமா
அனைவருக்கும் காய்ச்சல் வரும் என்று தெளிவாக கூறிவிட முடியாது அது ஒவ்வொரு உடலை பொருத்து மாறுபடும், ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல் வரலாம் அல்லது வராமலும் போகலாம்.
பூஸ்டர் தடுப்பூசி போட்ட பிறகு ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 முதல் 6 ஆறு மாதங்கள் வரை தொடர்ச்சியாக நீடித்திருக்கும்.