கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உண்மையில் உடலில் அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்(Covid-19 Infection Make Strong Immunity)
கொரோனா வைரஸ் கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் மனித உடலில் கொரோனா தொற்று உடலுக்குள் வந்த பிறகு பல்வேறு மாற்றங்களை உணர்கிறோம் பிறகு மனித உடலானது எவ்வாறு செயல்படுகிறது பலவீனமாக இருக்குமா என்கின்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவில் விடைகளைப் பார்ப்போம்
உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல முயற்சிகள் செய்தும் இந்த வைரஸ் பிறழ்வு எப்படி அதிவேகமாக நடக்கிறது என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிறழ்வு நடைபெறுவதால் இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது இப்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பெரிய தலைவலியாக அமைந்து விட்டது
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து இந்த வைரசால் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம் தற்போது அங்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்த வைரஸில் இருந்து விடுபட வேண்டும் என முயற்சி செய்கிறார்கள்
அதற்கு தடுப்பூசி என்பது இப்பொழுது அனைத்து நாடுகளிலும் வேகமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது இருப்பினும் இன்னும் பல இடங்களில் அதன் தீவிரம் குறையவில்லை பலர் இந்த வைரசால் உயிரிழந்து வரும் நிலையில் அதில் சில குணமடைந்து வருகிறார்கள்
கொரோன வைரஸ் உடலுக்குள் நுழைந்த பிறகு உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது குறிப்பாக அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது என ஒரு சிலரால் கூறப்படுகிறது ஆனால் அது எந்த அளவிற்கு உண்மையான விஷயம் என புரிந்து கொள்ள முடியவில்லை
அதேபோல் கொரோனாவில் இருந்து மீண்ட மக்களுக்கு அதன் பிறகு என்ன மாதிரியான சுகாதாரப் பிரச்சினைகள் வர உள்ளது என்பது இதுவரை தெளிவாக கண்டுபிடிக்கவில்லை அதனைப் பற்றி இப்போது விரிவாக பார்ப்போம்
நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு உடலால் அதிகரிக்க முடிகிறது என தெரிகிறது இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்கு நீடிக்கிறது சில ஆய்வுகளின் படி இந்த நோய் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதுமே இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல காரணங்களால் மாறுபடலாம் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் மற்றும் அதற்கு முன்பு அந்த நபருக்கு ஏற்பட்ட நோய் மற்றும் வயது உள்ளிட்ட விஷயங்களை பொறுத்து அவை மாறுபடுகிறது
கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர்களுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் கடுமையான நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே உச்சகட்ட அளவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது
உச்சக்கட்ட அளவில் நோய் எதிர்ப்பு சக்தி எப்பொழுது உருவாகிறது
உடலில் கொரோனா வைரஸ் முதன் முதலில் நுழையும் பொழுது நமது நோயெதிர்ப்பு மண்டலமானது இந்த வைரஸை தாக்குவதற்கு பலவழிகளில் தனது வேலையை தீவிரமாக ஆரம்பிக்கிறது மேலும் உடலும் உச்சகட்ட அளவில் இந்த வைரஸுக்கு எதிராக போராட ஆரம்பிக்கிறது
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் நமது உடலில் இந்த வைரஸை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தி உச்சகட்ட அளவில் இருக்கும் அதனால் உருவாகும் ஆன்டிபாடிகள் உடலுக்கு நன்மையை அளிக்கிறது
குணமடைந்த பிறகு 90 முதல் 120 நாட்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி உச்சகட்ட நிலையில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட சில நபர்களுக்கு இது ஏற்படுகிறது
அந்த விஷயத்தில் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்கும் 5 ராசிகள்
நோய் தொற்று எவ்வாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது
நமது உடலில் நோயெதிர்ப்பு மண்டலமானது கொரோனா வைரஸ் நுழைந்த பிறகு குறிப்பிட்ட மாற்றங்களை உடலில் ஏற்படுத்தி விடுகிறது அதனால் காய்ச்சல் மற்றும் அழற்ஜி ஏற்படும்
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து கொரோனா வைரஸ்சால் ஏற்படும் காய்ச்சல் எவ்வளவு நாட்களுக்கும் நீடிக்கும் என்பது அமையும்
இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்திற்க்கும் காய்ச்சலுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது 5 க்கு குறைவான அறிகுறிகளை கொண்டவர்களுடன் ஒப்பிடும் பொழுது அதிக அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு உடலில் ஆன்டிபாடிகள் அதிகமாக உள்ளது
எனவே கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாக்கினால் கடுமையான தொற்று உள்ளவர்களுக்கு மிக வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்
நோய் எதிர்ப்பு சக்தி எப்படி தீர்மானிக்கப்படுகிறது
ஒருவருக்கு நோய்த்தொற்று முழுமையாக குணமடைந்த பிறகு உடலில் உள்ள வேறு சில காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி மாற்றி அமைக்கலாம் அல்லது கடுமையாக பாதிக்கலாம் சில நபர்களுக்கு மட்டும் குறைவான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த நபர்கள் எப்போதும் ஆபத்தில் இருக்கும் நபர்களாக கருதப்படுகிறார்கள்
வயது மற்றும் பாலினம் போன்ற காரணிகள் முதன்மையாக உள்ளது ஒருவரின் வயதைபொறுத்தே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் மாறுபடும் ஆண்களோடு ஒப்பிடுகையில் வயதான பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது
இதே போல நோய்கள் அல்லது அதற்கு முன்பு இரூந்த உடல் உபாதைகளும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் மாறுபடுவதற்கு காரணமாகின்றது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள் நோய் எதிர்ப்பு திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது ஒரு நபருக்கு
கொரோனா கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கும் லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை காட்டிலும் அதிகமான அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது மேலும் அவர்கள் கடுமையான உடல் நிலைமையை கொண்டுள்ளார்கள் கொரோனா வைரஸ்ஸை கடுமையான எதிர்த்து போராடும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது
இதனால் உடலில் வைரசுக்கு எதிரான ஒரு வலுவான போராட்டத்தை அது ஏற்படுத்திவிடுகிறது அதனால் இது போல் இருக்கும் விஷயத்தை ஆதரிப்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றாலும் இது பல மருத்துவர்களால் முன்வைக்கப்படும் விஷயமாக இன்று மருத்துவ உலகில் உள்ளது
Most Read அஸ்வகந்தாவின் சிறந்த மருத்துவ குணநலன்கள்
உங்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் அது குறித்து அறிந்து கொள்ளுங்கள்
ஒருவருக்கு லேசாக ஏற்பட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் குறைவான ஆபத்துகளை வெளிப்படுத்துகிறது மேலும் மனித உடல் இந்த சமயத்தில் விரைவாக மீண்டுவர முயற்சி செய்கிறது ஒருவேளை கொரோனா அறிகுறிகள் அற்ற நோய்த்தொற்றுகள் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காரணமாக உள்ளது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
ஒருவேளை துரதிஷ்டவசமாக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் விரைவாக குறையும் பொழுது அந்த நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் உடலில் தீவிரமாக இருக்கலாம் எனவே சின்ன சின்ன அறிகுறிகள் இருந்தால் கூட அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ மனையில் சோதித்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் மனிதர்களுடைய அனைவரின் உடலும் ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்திகளை எப்போதும் நிலையாக கொண்டிருப்பதில்லை
எந்த நேரத்தில் தடுப்பூசிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்
தடுப்பூசியானது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகிறது வைரஸிலிருந்து குணம்மாணவர்களும் தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் மற்றும் உலக சுகாதார மையம் இதனை ஆணித்தனமாக தெரிவிக்கிறது
5 reasons not making love with your partner
உங்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸின் தீவிரத் தன்மையைப் பொருத்து தடுப்பூசிகள் மாறுபடுவதில்லை எனவே கொரோனா தடுப்பூசி வைரஸை கொள்ளும் ஒரு பெரும் ஆயுதமாக எப்பொழுதும் பார்க்கப்படுகிறது