டெல்டா வைரசுக்கு எதிராக எந்த தடுப்பூசியும் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரியுமா(covid-19 vaccine effectiveness against Delta)
கடந்த வாரம் டெல்டாப் பிளஸ் பிறழ்வு ஆபத்தான வைரஸ் என்று அறிவிக்கப்பட்டது இதற்கு இந்த பிறழ்வு மூன்று முக்கிய பண்புகளை கொண்டுள்ளது அதாவது அதிகரிக்கும் பரிமாற்றம் நுரையீரல் உயிரணுக்களின் ஏற்பிகளுக்கு வலுவான பிணைப்பு மற்றும் மோனனோக்ளோனல் ஆன்டிபாடி செயல்பாட்டில் குறைவு
இந்த டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதற்கு போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது பரவலான சோதனை உடனடி தடமறிதல் மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு ஆகியவை குறித்து முன்னுரிமைகளை எடுத்துக் கொள்ளவும் அறிவித்துள்ளது மத்திய அரசு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தடுப்பூசி கைகொடுக்குமா
இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம் என்பது இப்பொழுது சற்று மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது ஆனாலும் மருத்துவ வல்லுநர்களின் தொடர்ச்சியான சோதனைகளில் இப்பொழுது டெல்டா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் வைரஸ் ஆக மாறியுள்ளது
இது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இப்பொழுது ஆபத்தானது என்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
இப்பொழுது மக்களுக்கும் மற்றும் மருத்துவம் வல்லுநர்களுக்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை தடுப்பூசி மட்டுமே SARS-COV-2 வைரஸ் மற்றும் அதன் வகைகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாக உள்ளது
மிகவும் தீவிரமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் வகைகளில் ஒன்றான டெல்டா மாறுபாடு இந்தியாவின் இரண்டாவது அலைCOVID-19 போன்றது
இது உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது மற்றும் அழிவுகளை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது. முதல் முதலில் டெல்டா ப்ளஸ் மாறுபாடு மகாராஷ்டிரா கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டது
தற்போதைய சூழ்நிலை பொறுத்தவரை மக்கள் தடுப்பூசி முகாம் களில் அதிக அளவில் பங்கேற்பது மற்றும் வைரஸுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பு பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள் மேலும் இது முக்கியமானதாக இருக்கிறது மக்களுக்கு
MOAT READ கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தி
புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்
தடுப்பூசிகளை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தபோது அவை காவிட-19 திரிபு அதாவது ஆல்பா மாறுபாட்டை பொறுத்து உருவாக்கப்பட்டது எனவே டெல்டா மாறுபாடு மற்றும் வளர்ந்து வரும் புதிய வகைகள் தடுப்பூசிகளால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகளை மிஞ்சும் திறனை கொண்டுள்ளது என நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் புதிய பிறழ்வுகள் நோய்எதிர்ப்பு பாதுகாப்பில் இருந்து தப்பிக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பலனளிக்கிறது
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டும் டெல்டா மாறுபாட்டுக் எதிராக செயல்படுகிறது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் சமீபத்தில் இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் சிராம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவை டெல்டா கொரோனா வைரஸ்கு எதிராக நல்ல முறையில் செயல்படுகிறது என கூறியுள்ளார்கள்
திருமண உறவுக்குள் எத்தனை வகை நெருக்கம் உள்ளது
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் கூறுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் (ஸ்புட்னிக் பின்னர் இணைந்துள்ளது) நல்ல முறையில் செயல்படுகிறது ஆனால் இந்த தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் எந்த அளவிற்கு இருக்கும் என்று விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்
ஸ்புட்னிக் வி அனைத்து பிறழ்வுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறது
இந்தியாவில் இப்பொழுது விரைவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி அனைத்து வகையான கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கு நல்ல பலன் கொடுக்கிறது என கூறப்பட்டுள்ளது
இந்த ஸ்புட்னிக் வி போடப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திகள் COVID -19 இன்று அறியப்பட்ட அனைத்து வகைகளில் இருந்தும் சிறந்த முறையில் பாதுகாக்கிறது மனித உடலை இங்கிலாந்திலிருந்து தொடங்கி இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் வரை எதிர்த்துப் போராடுகிறது