கோவாக்சின் VS கோவிஷீல்ட் எது நல்லது தடுப்பூசி போடுவதற்கு முன்பு அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்(covishield or covaxin best vaccine for covid19)
தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் கோவாக்சின் VS கோவிஷீல்ட் இரண்டு தடுப்புசிகளில் எது சிறந்தது என்பதை பற்றி முழுமையான புரிதல் வேண்டும் அப்போதுதான் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கிடைக்கும்
இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியா மற்றும் விரைவில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை முதலில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் உலகில் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய ஒரு சவாலான விஷயம் உண்டானது
போர்க்கால அடிப்படையில் விரைவில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தப்பட்டால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் மேலும் அதைவிட பொருளாதார இழப்பு என்பது பல கோடி மக்களின் வாழ்வில் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதால் விரைவில் பஞ்சம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகி விடும்
இதனால் பசி பட்டினியால் அதிகமான மக்கள் மற்றும் குழந்தைகள் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது இதனை கருத்தில் கொண்டு இந்திய மட்டும் இல்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஒற்றுமையாக இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடித்தார்கள்
அதன் மூலப் பொருட்கள் ஒவ்வொரு நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் பகிர்ந்துகொண்டார்கள் இதன் மூலம் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது அதில் எது சிறந்தது என்பதை பல்வேறு கேள்விகள் மக்கள் இடத்தில் உள்ளது
கோவிட் தடுப்பூசிகள்
சமூக வலைதளங்களில் தடுப்பூசிகள் பற்றி மிக வேகமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் இந்த வதந்திகளை நம்புவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பயப்படுகிறார்கள்
நமது அரசாங்கம் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகளை முதலில் போட பரிந்துரைத்தது இதனிடையே கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இதனைத்தொடர்ந்து கோவிஷீல்ட் போட்டுக்கொண்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சில பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு கோவாக்சின் சிறந்த தடுப்பூசி என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினரும் இல்லை இல்லை இந்த வைரஸை தடுப்பதில் கோவிஷீல்ட் தான் சிறந்தது என சமூக வலைதளங்களில் மக்களை குழப்பி வருகிறார்கள்
எது சிறந்தது
அதேபோல் நமது அரசாங்கம் அவசர பயன்பாட்டிற்காக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் போன்ற முழுமையாக பயன்படுத்த கூடிய தடுப்பூசிகள் இப்பொழுது திறந்த சந்தையில் கிடைக்கும் என கூறியுள்ளது
இன்னும் சில நாட்களில் தனியார் நிறுவனங்களில் தடுப்பூசிகள் குறைந்த விலையில் அடிப்படையில் போட்டுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது மேலும் அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் எப்பொழுதும் போடப்படும் எனவும் தெரிவித்துள்ளது
எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசிகள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது அரசாங்கத்தால்
கோவிஷீல்ட்
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தடுப்பூசி கண்டுபிடித்தது அதனை இந்தியாவில் தயாரிக்க சிராம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது மேலும் இந்த மருந்து வெளிநாடுகளுக்கும் மற்றும் ஏழ்மையில் இருக்கும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் பணம் மற்றும் இலவசமாக ஏற்றுமதி செய்துள்ளது
சிம்பான்சி போன்ற மனிதக் குரங்குகளிடம் இருந்து சளி சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தும் அடினோ வைரஸ் அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது
இது கொரோனா வைரஸ் போல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இது நம்மளுக்கு நோயை ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்
இந்த தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது
ஒருவருக்கு தடுப்பூசி போட்ட உடன் உடலில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய நோய் எதிர்ப்பு மண்டலத்தை இந்த தடுப்பூசிகள் சரியாக தூண்டுகிறது
இதன் மூலம் கொரோனா தொற்று எதிர்த்துப் போராட உடல் தயாரான நிலையில் இருக்கும் கோவிஷீல்ட் செயல்திறன் 70 சதவீதமாக உள்ளது
இருப்பினும் இதை அரை டோஸாக பயன்படுத்தும்போது 90 சதவீத செயல்திறனை தரக்கூடும் ஒரு மாதத்திற்கு பிறகு முழு டோஸையும் போட்டுக்கொள்ளலாம் தடுப்பூசி 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பாக சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது
கோவாக்சின்
இது ஒரு செயலற்ற தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது இது கொல்லப்பட்ட கொரோனா வைரஸ்களால் தயாரிக்கப்பட்டது நீங்கள் இது குறித்து பயப்பட வேண்டாம் இது முற்றிலும் பாதுகாப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட
இந்திய பயோடெக்னாலஜி நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் கொல்லப்பட்ட கொரோனா வைரஸின் மாதிரியை பயன்படுத்தி இதனை கண்டறிந்துள்ளது
MOST READ கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தி
இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு முதலில் கொல்லப்பட்ட வைரஸ்கள் இந்தியாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தால் தனிமைப்படுத்தப்பட்டு நிர்வகித்த போது நம்முடைய நோய் எதிர்ப்பு செல்கள் இறந்த வைரசை அடையாளம் காணமுடியும் என புலப்பட்டது
இறந்த செல்களை நம்மளுடைய நோயெதிர்ப்பு மண்டலம் கண்டதும் அது ஆன்டிபாடிகளை தற்செயலாக தூண்டுகிறது எனத் தெரியவந்துள்ளது
இது எப்படி வேலை செய்கிறது
இந்த தடுப்பூசியை செலுத்தியவுடன் வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாக வேலை செய்கிறது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
ஆன்டிபாடிகள் வைரஸ் புரதங்களுடன் இணைகின்றன அதாவது வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரதங்கள் என அழைக்கப்படுபவை அதன் மேற்பரப்பை கவரும் இப்பொழுது ஆன்டிபாடிகள் வைரஸை இனம் கண்டறிந்து அழிக்கின்றன
The New Covid-19 Lambda variant virus Details
இதன் செயல்திறன் எப்படி இருக்கிறது
முதலில் செலுத்தப்படும்போது 78% செயல்திறனையும் கொடுக்கிறது கடுமையான covid-19 நோய்க்கு எதிரான 100 சதவீத செயல்திறனையும் இரண்டு முறை செலுத்தும்போது வெளிப்படுத்துகிறது என தெரியவந்துள்ளது இந்த தடுப்பூசியும் 2- 8 டிகிரி செல்சியஸில் சேமிக்க முடியும்