credit card for all farmers best scheme 2022

Credit card for all farmers best scheme 2022

அனைத்து விவசாயிகளுக்கும் கிரெடிட் கார்டு மத்திய அரசின் புதிய தொலைநோக்கு திட்டம்..!

pm-kisan திட்டத்தில் இணைந்து உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்குவதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது, இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிலம் இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2,000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

வேளாண் இடுபொருட்கள் வாங்க மற்றும் இதர வேளாண் சார்ந்த பணிகளுக்கு இந்த ஊக்கதொகை பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் pm-kisan திட்டத்தின் 11வது தவணைக்காக 12.50 கோடி விவசாயிகள் இப்பொழுது காத்திருக்கிறார்கள், இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ள சுமார் 12.50 கோடி விவசாயிகளுக்கும் மத்திய அரசு மற்றொரு சலுகையை வழங்க இப்பொழுது திட்டமிட்டுள்ளது.

Credit card for all farmers best scheme 2022

இதன்படி pm-kisan திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது, இதற்காக மே மாதம் 1ம் தேதி வரை சிறப்பு கிராம சபைகள் நடத்தி.

கிசான் கிரெடிட் கார்டு இல்லாத விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி pm-kisan திட்டத்தின் பயனாளிகள் யாருக்காவது கிரெடிட் கார்டு இல்லை என்றால் அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியைத் தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

இந்த விண்ணப்பப் படிவம் எளிமையாக இருக்கும் ஒரு பக்க விண்ணப்ப படிவத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள், பயிர் விவரங்கள், மற்றும் பயனாளிகள் வேறு எந்த வங்கியிலும் கிசான் கிரெடிட் கார்டு வசதி பெறவில்லை என்பதற்கான ஒரு சான்றிதழ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

Credit card for all farmers  நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கடன் அட்டை வழங்குவது மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது.

pm-kisan திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் e-KYC சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும், சமீபத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பயனாளியும் e-KYC வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இந்த வேலையை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் நிதிஉதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

Credit card for all farmers best scheme 2022

கிசான் கிரெடிட் கார்டு வழங்குதல்

Credit card for all farmers  கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கடன் அட்டையாகும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகள்.

கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன, அனைத்து விவசாயிகளும் இந்த கார்டு மூலம் கடன் பெற தகுதி பெற்றவர்கள் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது 2 சதவீதம் வட்டி சலுகை கிடைக்கிறது.

ஆவாரம் பூ பயன்கள் என்ன

உடனடியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 சதவீத கூடுதல் வட்டி சலுகை கிடைக்கிறது, இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.

Hot water for weight loss best tips 2022

இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டம் pm-kisan திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளதால், விவசாயிகள் இந்த வசதியை எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும்.

 

Leave a Comment