Cyclone Big Mandous make landfall 2022

Cyclone Big Mandous make landfall 2022

மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல் 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்தது..!

மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது 65-85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு அவசரமாக விரைந்துள்ளது.

424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் கடலோரம் வசிக்கும் மக்களுக்கு புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TNSMART செயலின் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் முன்னெச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், சென்னை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு அவசரமாக விரைந்துள்ளது.

Cyclone Big Mandous make landfall 2022

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன

புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையம் ஏற்பாடுகளை அவசரமாக செய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கையில் வங்கக்கடல் பகுதியில் நிலவிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடைந்து உள்ளதாக அறிவித்துள்ளது.

புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருகிறார்கள்.

அதேபோல் உணவு கூடங்கள், சமுதாயக் கூடங்கள், தயாராக இருப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காற்று அதிகமாக வீசக் கூடிய நிலையில் மக்கள் மரங்கள்,மின் கம்பங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

Cyclone Big Mandous make landfall 2022

என்னென்ன மாற்றங்கள் எடுக்கப்பட்டுள்ளன

Cyclone Big Mandous make landfall 2022 குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்படாமல் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை தங்க வைப்பதற்கு 169 நிவாரண மையங்கள் தயார்நிலை செய்யப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதனால்.

Cyclone Big Mandous make landfall 2022 மரம் அகற்றுவதற்கு 272 மர அரவை இயந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அரவை இயந்திரங்கள்.

ஹைட்ராலிக் மர அரவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு ஜேசிபி என 45 ஜேசிபி வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.

Post office best 9 scheme details in tamil

ஒவ்வொரு வார்டிலும் அவசர தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் TATA ACE மற்றும் 10 பணியாளர்களை தயார்நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு போர்க்கால அடிப்படையில் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்

Cyclone Big Mandous make landfall 2022 புயல் கரையை கடக்கும்போது புயலின் கண் பகுதி கரையை நெருங்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்.

Top 13 most delicious fruits in the world

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது,அரசு மறு அறிவிப்பு வெளியிடும் வரை பொதுமக்கள் தங்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment