புதிய வரலாறு படைத்த தீபாவளி பண்டிகை. (Deepawali is a festival with a new history2020)
உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் முக்கியப் பண்டிகையாக தீபாவளி உள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு சில மாகாணங்களில் இந்திய பண்டிகைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள இந்துக்களின் பண்டிகைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் ஆனால் தீபாவளி பண்டிகை எல்லா மாநிலத்திலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கும் இந்தியாவின் கலாச்சார பண்டிகைகளுக்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை தற்போது புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் மேலும் வரும் காலங்களில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நல்ல நட்புணர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளார்கள். நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் டி.சி, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், போன்ற மாகாணங்களில் இந்தியர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எம் பி ராஜ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீபாவளி பண்டிகையின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தீர்மானம் ஒன்றை அமெரிக்க பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் 7 உணவுகள்.
தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடினார்கள் அமெரிக்காவிலுள்ள சீக்கியர்கள் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்கின்றனர் தீபாவளி பண்டிகை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவும் வகையில் உள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு கட்சி வேறுபாடின்றி பலரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் வெற்றி பெற்றார்கள் குறிப்பாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதனால் இந்தியர்களுக்கும் இந்திய நாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பான் கார்டு என்றால் என்ன…? இந்திய அரசு ஏன் இதை கட்டாயப்படுத்துகிறது அனைத்து திட்டங்களுக்கும்.
நியூயார்க் நகரம்.
தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நியூயார்க் நகரில் உள்ள 102 மாடிகள் அடங்கிய எம்பயர் ஸ்டேட் கட்டடம் ஆரஞ்சு நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட.
அமெரிக்காவின் பார்லிமென்டில் இந்துக்கள் பண்டிகைக்கு முக்கியத்துவம் அளிப்பது இதுவே முதல் முறையாக உள்ளது.twitter