மூன்றாம் அலையை ஏற்படுத்த போகும் டெல்டா ப்ளஸ் வைரஸ் அதன் முக்கிய அறிகுறிகள் என்ன(Delta Plus variant symptoms new covid-19)
இந்தியாவில் இப்பொழுது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது அதுதான் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தோற்றம்
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் வழக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு இப்போது ஏற்படுத்தி வருகிறது ஏனெனில் இந்த வைரஸ் மாறுபாடு மூன்றாவது அலையை தூண்டக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்
ஏற்கனவே இந்தியாவில் கேரளா கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் இந்த கொடிய வகை வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இதில் முக்கியமான ஒரு விஷயம் என்றால் இதுவரை உலகில் 200 நபர்களுக்கு டெல்டா ப்ளஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் குறிப்பாக இந்தியாவில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த வகை வைரஸ் எதிர்காலத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஒரு அச்சம் தற்போது உலக நாடுகளுக்கு எழுந்துள்ளது எனவே இப்போது இப்படிப்பட்ட டெல்டா ப்ளஸ் வைரஸ் மாறுபாடு குறித்து அனைத்து தகவல்களையும் முழுமையாக பார்ப்போம்
டெல்டா ப்ளஸ் வைரஸ் என்றால் என்ன?
கொரோனா வைரஸின் B.1.617.2 பரம்பரை தான் காரணம் என்று மருத்துவ வல்லுநர்களும் தெரிவித்தார்கள் உலக சுகாதார அமைப்பு மே மாதம் 31-ஆம் தேதி இதற்கு டெல்டா என்று பெயர் சூட்டியது பின்னர் இந்த டெல்டா வகை Sarscov-2 அதிவேகமாக பரவக்கூடிய டெல்பிளஸ் ஆக மாற்றமடைந்தது
ஆனால் டெல்பிளஸ் வகை வழக்குகளில் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இதைப் பற்றி உடனே கவலை கொள்ள வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்
2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் உலகிலுள்ள ஏழை நாடுகள் முதல் பணக்கார நாடுகள் வரை இந்தியாவிடம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை இலவசமாகவும் மற்றும் பணம் கொடுத்துப் பெற்று வாங்கிக் கொண்டிருந்தது
இந்தியாவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது கருத்தின்படி அனைத்து நாடுகளுக்கும் மனிதநேயத்துடன் போர்க்கால அடிப்படையில் தடுப்பு மருந்துகளை விரைவாக அனுப்பி வைத்தது ஆனால் அதில் ஒரு தலைகீழ் மாற்றம் திடீரென நிகழ்ந்துவிட்டது
பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவில் 2 அலையின் தாக்கம் என்பது மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் உலக நாடுகள் மட்டுமல்லாமல் உலக சுகாதார மையமும் இந்தியாவை காப்பாற்றினால் முதலில் உலகத்தை காப்பாற்றலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து அனைத்து நாடுகளும் இந்தியாவை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்கி விட்டது
அந்த அளவிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் கடும் பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தியது குறிப்பாக வட மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு சரியாக இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவ வசதி பற்றாக்குறை உள்ளிட்ட எண்ணற்ற குறைகள் நிலவியது
ரஷ்யா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு உதவிகளை அனுப்பிக் கொண்டே இருந்தது இப்பொழுது இந்தியா இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வந்துள்ளது
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இடைப்பட்ட காலத்தில் மூன்றாவது அலை வருவது உறுதி இது குழந்தைகளை மட்டும் குறிவைக்கும் என்று தெரிவித்தார்கள் அதற்கு ஏற்றார் போல் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது
ஐரோப்பியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது
புதிய கொரோனா டெல்டா ப்ளஸ் அதன் ஸ்பைக் புரதத்தில் மாற்றமடைந்துள்ளது ஆகவே இது B.1.617.2.1 என பெயர் சூட்டப்பட்டது தொலைக்காட்சி பத்திரிக்கை அறிக்கையின்படி இந்த வகை முதன்முதலில் ஐரோப்பியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
டெல்டா ப்ளஸ் மாறுபாட்டின் இருப்பை கண்டுபுடிக்க தேசிய வேதியியல் ஆய்வகமானது மகாராஷ்டிராவில் இருந்து ரத்தனகிரி மற்றும் சிந்துதுர்க் மாதிரிகளைக் கொண்டுவந்து ஆய்வு மேற்கொண்டது இந்த இரண்டு பகுதிகளிலும் உள்ள மாதிரிகளும் இந்தியாவில் தொற்றுநோய்களின் விகிதத்தை உயர்த்தும் படிப்படியாக உள்ளது
டெல்டா ப்ளஸ் அறிகுறிகள் என்ன?
இந்த புதிய மாறுபாட்டை இப்பொழுது உலக விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார மையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது மற்றும் ஆய்வாளர்களும் COVID-19 டெல்டா ப்ளஸ் மாறுபாட்டால் ஏற்படும் அறிகுறிகள் இடையிலான முக்கிய வேறுபாடுகளை சிலவற்றைச் சுட்டிக் காட்ட முயற்சி செய்கிறார்கள்
இது பற்றிய ஆரம்ப ஆய்வுகளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மட்டுமில்லாமல் வரட்டு இருமல், காய்ச்சல், சரும அரிப்பு, தோல் வெடிப்பு, கால்விரல் மற்றும் கைவிரல் நிறமாற்றம், தொண்டை வலி, விழிவெண்படல அலர்ஜி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், மற்றும் பேசமுடியாமல் தவிர டெல்டா ப்ளஸ் நோயாளிகள் வயிற்றுவலி குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, காது கேளாமை போன்றவற்றையும் வெளிப்படுத்தினர்
MOST READ கொரோனா தடுப்பூசி மனித இனத்தை பாதுகாக்குமா
இது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா
டெல்டா ப்ளஸ் மாறுபாடு வரும் மாதங்களில் மூன்றாவது அலையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அபாய அடித்துள்ளார்கள்
ஏனெனில் இந்த வகை மாறுபாடு உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை தாக்கக்கூடும் என்னதான் இந்த புதிய வகை டெல்டா ப்ளஸ் வழக்கு இந்தியாவில் குறைவாக இருந்தாலும் வரும் காலங்களில் இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ஏனெனில் 2வது அலை ஆரம்பிக்கும் முன் டெல்டா வைரஸ் வழக்குகள் குறைவாகவே பதிவானது ஆனால் ஆரம்பித்த சிறிது நாட்களில் இந்த டெல்டா வைரஸ் பரவி
MOST READ 29 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
வேகம் மருத்துவ வல்லுநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அந்த அளவிற்கு டெல்டா வைரஸ் வேகம் இருந்தது மேலும் உயிர் இழப்பு என்பது ஒரு நாளைக்கு 4 ஆயிரத்தை கடந்து இருந்தது இந்த டெல்டா வைரஸ் மிக விரைவாக உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ்யாக மாற்றமடைந்தது
இப்பொழுது பதிவாகியுள்ள 40 வழக்குகள் என்பது அதிகம் தான் இதனை எளிதாக எடுத்துக் கொண்டால் முன்பு ஏற்பட்ட பாதிப்பை விட கற்பனை செய்து கூடப் பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் ஏற்படுத்தும் என்பது ஒரு உண்மையான விஷயம்
covishield or covaxin best vaccine for covid19
அதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டு முடிந்தவரைக்கும் பாதுகாப்பாக இருப்பதும் மட்டுமில்லாமல் அரசாங்கம் கூறும் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்