Delta type coronavirus detected new 2021

இந்தியாவில் டெல்டா கொரோனா + வைரஸ் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய அறிக்கை(Delta type coronavirus detected new 2021)

இந்தியாவில் கொரோனா தொற்று 2ம் அலை டெல்டா என்னும் பிறழ்வுகளிலிருந்து உருவெடுத்து மக்களை கடுமையாக பாதித்தது இந்தியாவில் இருக்கும் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது

இதன் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்தியா இப்பொழுது புதிய வைரஸ் பற்றி தெரிந்ததும் மேலும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளது இந்த வைரஸ் யாரும் கணிக்க முடியாத அளவிற்கு உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது  இப்பொழுது டெல்டா ப்ளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டில் டெல்டா என்னும் வகையில் உருமாறி பரவிவருகிறது இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த வைரஸால் தற்போது அங்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு மேலும் ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்திற்கு நீட்டி உள்ளது

அமெரிக்காவில் இருக்கும் மக்களுக்கு தடுப்பூசிகள் ஓரளவுக்கு போடப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று இப்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது

இலங்கையிலும் மூன்றாம் அலை உருவெடுத்துள்ளது ஜப்பானில் நான்காம் அலையால் மருத்துவமனையில் நிரம்பி வழிகிறது மலேசியாவிலும் மூன்றாம்  அலையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது

அடுத்த ஒரு மாதத்தில் இந்தியாவில் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பு உள்ளது அப்படி உருவாக்கினால் அது குழந்தைகளை மட்டும் தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்

தற்போது இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை வைரஸ் மேலும் உருமாறி உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

அதன்படி டெல்டா என்னும் வகை வைரஸ் உருமாறி மாறி டெல்டா ப்ளஸ்யாக  தோன்றிள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள் இந்த உருமாற்றம் வைரஸின் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

இதுகுறித்து இந்திய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரிய அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்

மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்து உள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்த டெல்டா பிளாஷ் வகை வைரஸ் ஆனது அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவே இது குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிக்கையில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக இந்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டு உள்ளது

அது என்னவென்றால் மூன்றாவது அலை  அடுத்த 2 மாதத்தில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு ஆக்சிஜனுடன் 100 படுக்கை வசதி கொண்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

கூகுள் சுந்தர் பிச்சைக்கு 80,000 கோடி சம்பளம் முதலிடத்தில் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்

Delta type coronavirus detected new 2021

குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு இப்போதிலிருந்து பயிற்சிகள் கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும் மருத்துவமனையில் இருக்கும் தலைமை குழந்தைகள் நல மருத்துவர் இதற்கு தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும்

Delta type coronavirus detected new 2021

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

மருந்துகள் கையிருப்பு ஆக்சிஜன் படுக்கை வசதி அவசர கால ஊர்தி வசதி உணவு வசதி என எல்லா வகையிலும் குழந்தைகள் நல மருத்துவர்கள் இப்போதிலிருந்து தயாராக வேண்டுமென தெரிவித்துள்ளார்கள்

Indian Navy SSC officer recruitment 2021 new

Leave a Comment