Dindigul Thalappakattu biryani best tips 2022
Dindigul Thalappakattu biryani best tips 2022
சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
நம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி கடைக்கு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும், அந்த அளவிற்கு கடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது.
ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணி வீட்டில் எப்படி செய்வது என்று தெரியாது.
அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி எளிய செய்முறை இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதை படித்து உங்கள் வீட்டில் இந்த வாரத்தில் இதை செய்து பாருங்கள்.
தலப்பாக்கட்டி பிரியாணிக்கு தேவையான பொருட்கள்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி – 3 கப்
வெங்காயம் – 2 சிறிதாக நன்றாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1/2 கப்
கறி தூள் – 1/2 கப்
புதினா கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கெட்டியான புளிக்காத தயிர் – 1 கப்
தேவையான மசாலா பொருட்கள்
சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2
ஏலக்காய் – 4
அன்னாசிப்பூ – 1
கிராம்பு – 4
திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி செய்யும் முறை
முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி பின் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கெட்டியான புளிக்காத தயிர் 1 கப் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து 10 நிமிடம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்பு பாசுமதி அரிசியை கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும்.
வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை நன்கு சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதன் பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 10 நிமிடம் நன்கு கிளறி சிக்கனில் மசாலா சேரும் வரை நன்கு வதக்க வேண்டும் அதன்பிறகு சிக்கனை மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வைக்க வேண்டும்.
அதன் பிறகு குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
Dindigul Thalappakattu biryani best tips 2022 அந்த வானொலியை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 10 நிமிடம் நன்கு கிளறி குக்கரில் போட்டு கொள்ள வேண்டும்.
அந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
Dindigul Thalappakattu biryani best tips 2022 நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் குக்கர் மூடியை தீயை அதிகரித்து 2 விசில் விட்டு பின் தீயை குறைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கர் நன்கு சூடு ஆறியதும் அதன் மூடியை திறக்கலாம் இப்பொழுது சுவையான தலப்பாக்கட்டு பிரியாணி தயாராகி விட்டது.