Direction signage board fell down 1 killed
சென்னை கிண்டி கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலி மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்..!
சென்னை கத்திப்பாரா அருகே ஆலந்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது சாலை வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியாகி விட்டார் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அரசு பேருந்தின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆங்காங்கே பெரிய அளவில் சாலை வழிகாட்டும் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பலகைகளின் உதவியுடன் அந்த பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பமில்லாமல் செல்ல இது உதவுகிறது.
அந்தவகையில் தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, செல்வது எப்படி என்பதை விளக்கும் பலகை உள்ளது.
பெரிய அளவிலான இந்த பலகை இருபுறமும் இரும்புத்தூண் நிறுவப்பட்டு அதில் பொருத்தப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் சிக்கியது எப்படி
இந்தநிலையில் இந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது இந்த பலகை திடீரென விழுந்தது.
இதில் இருசக்கர வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது, இதில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பலியாகிவிட்டார்.
பேருந்தின் முன்பக்கம் நடந்தது என்ன
அதுபோல் அரசு பேருந்தின் முன்பக்கம் இருந்த கண்ணாடி கடுமையாக சேதம் அடைந்தது தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள்.
உடனடியாக போர்க்கால அடிப்படையில் கிரேன் மூலம் விழுந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை அப்புறப் படுத்தி வருகிறார்கள், காயமடைந்தவர்களின் விவரங்கள் சரியாக தெரியவில்லை.
பலகை விழுந்தது எப்படி
Direction signage board fell down 1 killed மிகப்பெரிய அளவில் இரும்புத்தூண் மூலம் இந்த பலகைகள் நிறுவப்படுகிறது இதுவரை தமிழ்நாட்டில் இது போல் ஒரு விபத்து நடந்ததில்லை இதுவே முதன் முறை.
இது நடந்ததால் தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இப்பொழுது பயம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இதில் ஊழல் நடந்துள்ளது என்பது இதன் மூலம் வெளிச்சமாக தெரிகிறது, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள், சிறு கிராமங்கள், முதல் இதுபோன்ற பலகைகள் இருக்கிறது.
Direction signage board fell down 1 killed இதில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது, எவ்வளவு தரமற்ற பொருட்கள் இருக்கிறது, என்பதை இந்த விபத்தின் மூலம் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து விசாரணைக்கு பிறகு இந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரிய வரும் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இல்லாவிட்டால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து இருக்கும், அதுமட்டுமில்லாமல் உயிரிழப்பு என்பது அதிகரித்து இருக்கும்.
இந்த பலகை எப்படியும் 40 முதல் 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைகளில் இரும்பு தூண்களின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பலகை விழுந்த எப்படி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
எப்பொழுது இந்தப் பாலம் கட்டப்பட்டது
Direction signage board fell down 1 killed தமிழ் நாட்டில் இதுபோன்ற விபத்து இதுவே முதல் முறை என்பதால் இது கடுமையான ஒரு தாக்கத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற பெயர் பலகைகள் இருக்கிறது.
முதல் முறையாக இது போன்ற ஒரு விபத்து நடந்துள்ளதால் இனிமேல் பெயர் பலகைகளை கண்டால் கட்டாயம் அனைத்து நபர்களுக்கும் ஒரு அச்சம் ஏற்படும்.
இதுகுறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் அனைத்து பெயர் பலகைகளில் சோதனையிட்டு சேதமடைந்துள்ள பெயர் பலகைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.