Disadvantages of Ro water full details 2022
RO வாட்டர் ஆபத்தானதா நீங்கள் குடிப்பது எதற்காக முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..!
கேன் வாட்டரை உருவாக்கக்கூடிய ரிவர்ஸ் அஸ்மாசிஸ் Reverse osmosis எனப்படும் (RO) முறையை தடை செய்வது தொடர்பாக.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு (MOEF) தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) ஒரு சுற்றறிக்கையை நாடு முழுவதும் இப்பொழுது வெளியிட்டுள்ளது.
நீங்கள் குடிக்கும் குடிநீரில் T.D.S அளவு இருக்கிறது இந்த T.D.S அளவானது ஒவ்வொரு மாநிலம் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
இந்த T.D.S அளவானது எந்தெந்த இடங்களில் எல்லாம் 500க்கு குறைவாக இருக்கிறதோ, அவற்றை தடை செய்ய வேண்டும்.
என்று நாடு முழுவதும், இப்பொழுது தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மக்கள் தங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீர் சுத்திகரிப்புபட்டதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதாவது ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிக்க (RO) முறை நாடெங்கிலும் இப்பொழுது பரவலாகபட்டுள்ளது என சொல்லலாம்.
இதற்காக குறைந்தபட்சம் ரூபாய் 10,000/- முதல் அதிகபட்சம் 15,000/- ரூபாய் வரை சுத்திகரிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன, இது இப்பொழுது அதிகமாக மக்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
புதிய உத்தரவு என்ன சொல்கிறது
இப்பொழுது நாடு முழுவதும் (RO) தண்ணீர் சுத்திகரிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு புதிய அறிக்கையை தாக்கல் செய்தது.
இதையடுத்து தீர்ப்பாயம் மத்திய அமைச்சகத்திற்கு ஒரு புது உத்தரவையும் அளித்துள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு Total Dissolved Solids (TDS) 500 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்கும் வகையில்.
தண்ணீரை சுத்திகரிக்கும் (RO) இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்து விரிவான அறிவிப்பினை.
2 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும், என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் அறிவித்துள்ளார்.
இந்த வகை (RO) முறையால் பெறப்படும் தண்ணீர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே இதை உடனடியாக தடை செய்ய வேண்டும், இந்த உத்தரவை விரைவாக அமல்படுத்துங்கள்.
2 மாதங்களுக்குள் தடைசெய்வது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
கால அவகாசம் தேவை
இதையடுத்து இந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நாடு முழுவதும் அமல்படுத்த குறைந்தபட்சம் 4 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது.
என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கும்போது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கருத்து மற்றும் சில ஆலோசனைகள்
இந்த அறிவிப்பினை வெளியிட்டு அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் நாடுமுழுவதும் தேவைப்படுகிறது.
அனைவருக்கும் தெரியப்படுத்தி கருத்துகள் ஆலோசனைகள் கேட்பதற்கு குறைந்தபட்சம் 2 மாத கால அவகாசம் போதுமானதாக இருக்காது.
மேலும் சட்டம் மற்றும் நீதித்துறையிடமிருந்தும் இதற்கான ஒப்புதலை பெற வேண்டும்.
எனவே குறைந்தபட்சம் 4 மாத கால அவகாசம் இருந்தால் இந்த உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த முடியும்.
ஆனால் அதே நேரத்தில் 2 மாத கால அவகாசத்தில் நாங்கள் அதை செயல்படுத்த முயல்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள விளக்கம்
சாதாரண நீரில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பை கார்பனேட், போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன அதன் அடர்த்தி TDS என அளவிடுகிறோம்.
ஒரு லிட்டர் நீரில் கரைந்துள்ள இந்த ஊட்டச்சத்துக்களின் மொத்த அளவு 500 மில்லி லிட்டருக்கு குறைவாக இருக்கக்கூடாது.
ஹோட்டல் சுவையில் வீட்டில் எக் ரைஸ் செய்வது எப்படி..!
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் தண்ணீரை சுத்திகரிக்கும் போது TDS அளவு 500 மில்லி லிட்டர் கீழ் அளவுக்கு சென்றுவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
Best Health Benefits of redsnapper Fish 2022
இதுபோன்ற தண்ணீரை குடிக்கும் மக்களின் உடம்பில் எலும்பு உறுதித் தன்மை இழத்தல் போன்ற பல்வேறு வகையான உடல் உபாதை பிரச்சினைகள் ஏற்படுகிறது.
எனவே இந்தியாவின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த இயந்திரங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.