DMK and BJP words Battle in social media 2022
கடும் முற்றும் மோதலுடன் தமிழகத்தில் எதிர்த்து நிற்கும் திமுக மற்றும் பாஜக..!
முரசொலியில் ஒரு கட்டுரை வெளிவந்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரத் மாதா ஜே என்று சொல்வதால் இந்தியாவை வளர்த்துவிட முடியாது, என்ற தலைப்பில் முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா செய்தி நிறுவனத்தின் 2022 நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது முதல் அவர் பேசும்போது மொழிவாரியாக மாநிலங்களை நேரு உருவாக்கினார் இந்தி திணிப்பு இருக்காது என்று என்று உறுதி அளித்தார்.
வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்படுத்தினார், பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்கினார்.
சகோதரத்துவத்தை வலியுறுத்துவதோடு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார், அனைத்து தரப்பு விவாதம் செய்யும் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முதலமைச்சர்களுடன் கடிதம் வாயிலாக பேசினார், இதனால் தான் இந்தியா 75 ஆண்டுகள் வலிமையாக நின்றுகொண்டு உள்ளது.
இந்தியா மேலும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் ஜனநாயக கருத்துக்களை தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என அவர் உரையாற்றினார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்
DMK and BJP words Battle in social media 2022 சமத்துவம் மாநில சுயாட்சி. சகோதரத்துவம், சமூகநீதி கருத்துகளை வலியுறுத்தினால் மட்டுமே நாடு நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும்.
ஆனால் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது, திமுக எம்பிக்கள் உட்பட 27 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
களத்தில் கூட கருத்து பேச முடியாத நிலை உருவாகியுள்ளது, இந்தியாவுக்கு ஒரே தேசிய மொழி, என்பது சாத்தியமில்லை.
ஒரே நாடு, ஒரே மொழி, என்று கூறுவது இந்தியாவின் எதிரிகள் என்று ஸ்டாலின் அவர்கள் காட்டமாக தெரிவித்தார்.
தலையங்கம் என்ன சொல்கிறது
DMK and BJP words Battle in social media 2022 இந்த நிலையில் முரசொலி நாளிதழ் இன்றைய தலையங்கத்தில் முதல்வரின் திருச்சூர் சொற்பொழிவை பதிவிட்டு உள்ளது பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது சுருக்கம்தான் இது.
இந்தியா இந்தியா என்று பேசுவதால் பாரத தேசமென்று இழுத்துச் செல்வதால், பாரத் மாதா ஜே என்று குரல் கொடுப்பதால், இந்தியா வளர்ந்து விடமுடியாது.
இந்தியாவை வளர்க்க மக்களை வளம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும், மக்களை வளம் உள்ளவர்களாக மாற்றும் கடமை பொறுப்பு மாநில அரசுகளிடம் இருக்கிறது.
அத்தகைய மாநில அரசுகளை மதிக்க வேண்டும், அவர்களுக்கான உரிமைகளை சரியாக வழங்க வேண்டும்.
சரியான நேரத்தில் பொருளாதாரத்தை வழங்க வேண்டும் என கட்டுரை வெளிவந்துள்ளது.
பாஜகவின் கருத்து என்ன
DMK and BJP words Battle in social media 2022 உலகின் நம்பர் 1 ஊழல் கட்சி என்றால் அது திமுக மட்டுமே திமுக மக்களின் நலத்தை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
திமுக என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது ஊழல் மட்டுமே இதை ஞாபகம் வைத்து திமுக செயல்பட வேண்டும், என சமூக வலைதளங்களில் திமுகவை பற்றி கடுமையான விமர்சனங்கள் வருகிறது.