Dolo 650 tablet amazing benefits in tamil
டோலோ 650 பயன்பாடுகள் என்ன…!
மாத்திரைகள், மருந்துகள், கசாயம், மூலிகை டீ, எண்ணெய் வித்துக்கள், என்பது.
மனித உடலில் ஒரு நோயை கண்டறிய, குணப்படுத்த சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.
மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்தல் என்பது மருத்துவ துறையின் ஒரு முக்கிய பகுதியாகவே மருத்துவர்களால் கருதப்படுகிறது.
உடலில் ஏற்படும் நோய்கள் குணமாக மற்றும் நோய் வராமல் தடுக்க மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொண்டாலும்.
அதனுடைய நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
எனவே இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள டோலோ 650 மாத்திரையின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
டோலோ 650 மாத்திரை என்றால் என்ன?
டோலோ 650 மாத்திரை லேசான வலி நிவாரணி என்று வகைப்படுத்தப்படுகிறது.
அதாவது காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரையாகும்.
குறிப்பாக தலைவலி,குளிர், மூட்டு வலி, பல்வலி, காது வலி, முதுகு வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி போன்ற பல்வேறு வகையான.
உடல் உபாதைகள் வந்தால் வலியைத் தணிக்க இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது, உடலில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.
புற்று நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும்.
அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இது பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
டோலோ 650 பயன்பாடுகள்
டோலோ 650 மாத்திரை என்பது பாராசிட்டமால் மாத்திரை வடிவிலும் கிடைக்கும் சரி அதன் பயன்பாடுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
காய்ச்சலில் இருந்து தற்காலிக நிவாரணம் வழங்கப்படுகிறது, நோயளிகளுக்கு மருத்துவர்களால் இந்த மாத்திரை அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி உட்பட கடுமையான தலைவலியை தணிக்க டோலோ 650 மாத்திரை பயன்படுத்தலாம்.
தசைகளில் லேசானது முதல் மிதமான வலியைத் தணிக்க டோலோ 650 மாத்திரை பயன்படுத்தலாம்.
தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்த இந்த டோலோ 650 மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
கீல்வாதம் உள்ள போது லேசான வலியுடன் கூடிய மூட்டு வலியை தணிக்க இந்த டோலோ 650 மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடைய வழிகளையும் தசைப்பிடிப்புகளையும் குணப்படுத்த இந்த மாத்திரை பயன்படுத்தலாம்.
யாரெல்லாம் இந்த மாத்திரையை பயன்படுத்தக்கூடாது
உடலில் ஒவ்வாமை நோய் உள்ளவர்களுக்கு இந்த மாத்திரையைப் பயன்படுத்தக்கூடாது.
நீங்கள் தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மது பானங்கள் அருந்தினால் மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது.
இதனுடைய பக்கவிளைவுகள் என்ன
இந்த மாத்திரை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு கடுமையான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை ஆனால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
உடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள்
அதிகமான பக்கவிளைவு ஏற்படுவதில்லை சில பக்க விளைவுகள் அரிதானவை ஆனால் சில நேரங்களில் தீவிரமாக இருக்கலாம்.
7 worst Side Effects Caused by Smoking
ஒரு வேளை இந்த மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கவிளைவுகள் ஏதாவது ஒன்றை கவனித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
கல்லீரல் சேதம்,
குமட்டல்,
மூச்சுத்திணறல்,
முகவீக்கம் தடித்தல்,
ஒவ்வாமை எதிர்வினைகள்,
நோய் உணர்வு,
தடித்தல்,
ஒவ்வாமை,
முகவீக்கம்,
தீவிரமான சிறுநீரக குழாய் நசிவு,
ரத்த அணுக்கள்,
இயல்பு கல்லீரல் நச்சுத்தன்மை,
குறைவான வெள்ளை இரத்த அணுக்கள்.